இ-நிர்வாக தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து இ-நிர்வாக திட்டம் / முன் முயற்சி / தீர்வுகள் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 25-வது தேசிய விருதுகள் 2022 நவம்பரில் வழங்கப்படவுள்ளன.
2021-22- ஆம் ஆண்டுக்கு கீழ்க்காணும் வகைமைகளில் தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசு நடைமுறையில் சிறந்த மறுகட்டமைப்பு செய்தல்
குடிமக்களை மையப்படுத்தி சிறந்த சேவை வழங்குதல்
இ-நிர்வாகத்தில் மாவட்ட அளவில் சிறப்பான முன் முயற்சி
கல்வி/ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் குடிமக்களை மையப்படுத்திய சேவைகள் குறித்து சிறப்பான ஆய்வு
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துதல்
இந்த வகைமைகளில் வழங்கப்படும் தேசிய விருதுகளுக்கு www.darpg.gov.in மற்றும் www.nceg.gov.in இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 31.07.2022 கடைசி நாளாகும்
கருத்துகள்