காவிரியாற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி திருச்சிராப்பள்ளி , திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- மேட்டூர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதுடன் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்ற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதனால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிப்போர் ஆற்றிலிறங்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டவோ கூடாது. மேலும் கரையோரங்களில் ஆபத்தான முறையில் செல்பி எடுப்பது உள்ளிட்டவை போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாதென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள்