கள்ளக்குறிச்சி சக்தி இண்டர்நேஷனல் உண்டு உறைவிடப் பள்ளி மாணவி ஸ்ரீ மதியின் மர்மமான மரணமும் அதுசார்ந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்
அந்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை முதன்முதலில் விசாரித்த கள்ளக்குறிச்சி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மாணவியின் மரணத்தைச் சந்தேக மரணமாக வழக்கு பதிவுசெய்த நிலையில் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி காவல்துறை விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஸ்ரீதர், சென்னை கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக ஏற்கனவே நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக ஷ்ரவன் குமார் ஜடாவதி நியமனம் செய்யபட்டார். மேலும் கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பகலவன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை இச் சம்பவம் ஏற்படுத்திய நிலையில். கலவரம் மற்றும் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கிடையே அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக இருந்த ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய டிஎஸ்பியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வியடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள், அமலாக்கத்துறை ஐஜியாக மாற்றப்பட்டார். உளவுத்துறையின் புதிய ஐஜியாக செந்தில்வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக `309 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 141 வாகனங்களை மீட்க யாரும் முன்வரவில்லை என்பதுடள் காவல்துறை கைப்பற்றினர் தீ வைத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் இயங்கி வந்த சக்தி இண்டர்நேஷனல் பள்ளிக்கு எதிராக நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் ஒரு கட்டத்தில் திடீரென கலவரமாக மாறியது. காவல்துறையினரின் வாகனங்கள், பள்ளி பேருந்துகளும், இதர வாகனங்களும், பள்ளி வளாகம் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கலவரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, சிறப்புப் புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டதன்படி, சிறப்புப் புலனாய்வுக்குழு உரிய விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், கலவரத்தின்போது காவல்துறை வாகனங்களுக்கு முதலாவதாக தீ வைத்ததாக இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
சின்னசேலம் அருகேயுள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபர், காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்ததாக தற்போது கைது செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மேலும், இந்தக் கலவரத்தின்போது அந்தப் பகுதியில் செல்போன் நெட்வொர்க் மற்றும் சாலை நடுவே உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுவரும் போலீஸார், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரையில், இந்தக் கலவரம் தொடர்பாக 309 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் குறிப்பிட்ட அளவிலான சிறார்களும் அடக்கம்.
அவர்கள்மீது, 147 (சட்ட விரோதமாக கூடுதல்),148 (ஆயுதங்களுடன் கூடுதல்), 294(b) (ஆபாசமாகப் பேசுதல்) மற்றும் 323, 324, 352, 332, 336, 435, 436, 379, IPC.r/w.3,4,5.of பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கலவரம் நடைபெற்ற அன்று... தனியார் சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலிருந்து ஏராளமான வாகனங்கள் கிடந்ததாகக் கூறி, அவற்றை கைப்பற்றியிருக்கும் காவல்துறையினர்... இந்த வாகனங்கள் கலவரத்துக்கு வந்தவர்கள் விட்டுச் சென்றவையாக இருக்குமா... அல்லது பயத்தால் சிலர் விட்டுச் சென்றவையா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதுவரையில், 141 இருசக்கர வாகனங்களை மீட்டு, அவற்றை சின்னசேலம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த வாகனங்களின் பதிவெண்களைக்கொண்டு அவற்றின் உரிமையாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் கலவரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் சிறப்புப் புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பள்ளி நிர்வாகத் தரப்பைச் சேர்ந்த ஐந்து குற்றவாளிகளைக் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி காவல்துறை சார்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அது குறித்து விரைவில் விபரம் தெரியவரும்.
கருத்துகள்