உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளித்து நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார்
வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளித்து நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு பகுதி சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய திரு நாயுடு, மக்களுக்கிடையே அடிக்கடி நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள், நாட்டின் ஒற்றுமையையும். ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தக் கூடியவை என்று தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பிராந்தியத்தின் அனைத்து 8 மாநிலங்களையும் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 75 மோட்டார் சைக்கிள் வீரர்கள், 18 மாநிலங்களில் பயணம் செய்துள்ளனர். நடமாடும் வடகிழக்கு என்ற இந்தப் பயணத்தில் பங்கேற்றவர்களுடன் குடியரசு துணைத்தலைவர் கலந்துரையாடினார்.
அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் தாம் அண்மையில், பயணம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டிய திரு நாயுடு, அழகிய நிலப்பகுதி, செழுமையான கலாச்சாரம், மக்களின் இனிய விருந்தோம்பல் ஆகியவற்றைக் கொண்ட இந்த மாநிலங்கள் உண்மையிலேயே பயணிகளின் சொர்க்கம் என்று கூறினார். வடகிழக்குப் பிராந்தியத்தில் பயணம் மேற்கொண்டு மக்கள், அதன் எழில், கலாச்சாரம் ஆகியவற்றை அனுபவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்
இயற்கை வேளாண்மை விஷயத்தில் வடகிழக்கு பிராந்தியம் நாட்டுக்கே வழிகாட்டுவதாக பாராட்டிய குடியரசு துணைத்தலைவர் வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளை மற்ற மாநிலங்களும் கற்றுக் கொண்டு படிப்படியாக நீடித்த விவசாயத்திற்கு மாறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர் , இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்திற்கு இத்தகைய முயற்சிகள் வழிகோலியிருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து கவலை வெளியிட்ட திரு நாயுடு, விபத்துக்களைக் குறைக்க அனைத்து மட்டத்திலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருத்துகள்