இரு நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்ற சூரியமின்சக்தி, பாதுகாப்பு வர்த்தகம், ராணுவ பரிமாற்றங்கள், நேரடி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு, சுகாதார கவனிப்பு மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் ஆப்பிரிக்காவுடன் தனது ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது: திரு பியூஷ் கோயல்
இரு நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்ற நான்கு துறைகளில் ஆப்பிரிக்காவுடன் தனது ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. முதலாவது துறை சூரிய மின்சக்தியாகும். இது தூய்மையான எரிசக்தியை கொண்டு வரவும், எரிசக்தி பாதுகாப்புக்கும், உதவுவதோடு ஆப்பிரிக்காவில் வேலைவாய்ப்பை உருவாக்கும். இரண்டாவது பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராணுவ பரிமாற்றங்கள், ராணுவ வாகனங்கள் உற்பத்தி ஆகியவை மூன்றாவது நேரடி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு இது தகவல் தொழில்நுட்பம்/ ஆலோசனை மற்றும் திட்ட ஏற்றுமதிகளுக்கு உதவும். நான்காவது சுகாதார கவனிப்பும், மருந்து உற்பத்தி துறையும்.
இந்தியா, ஆப்பிரிக்கா வளர்ச்சி பங்களிப்பு குறித்த சிஐஐ-எக்சிம் வங்கி மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய மத்திய தொழில், வர்த்தகம் நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பகிரப்பட்ட வரலாறு, வர்த்தக உறவுகள், திரைப்படத்திற்கான ஈர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளாக இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கிடையே ஆழமான நட்பு வளர்ந்துள்ளது என்றார்.
இந்தியா, ஆப்பிரிக்கா செயல்பாட்டின் நான்கு தூண்களாக மக்களோடு மக்கள் தொடர்பு, வியாபாரம், வணிகம், அரசு ஆகியவை விளங்குவதாக அவர் கூறினார். சுமார் 46 ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய வம்சாவளியினர் இருப்பதாக குறிப்பிட்ட அவர், கடந்த 25 ஆண்டுகளில் 71 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து ஆப்பிரிக்காவில் முதலீடு செய்துள்ள 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றார்.வர்த்தகத்தை பொறுத்தவரை இந்தியாவின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக ஆப்பிரிக்கா இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். 2019-20-ல் 67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நமது வர்த்தகம், 2021-22-ல் 34 சதவீதம் உயர்ந்து 89 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியாவின் ஏற்றுமதி 40 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இறக்குமதி 49 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
குடிநீர் போக்குவரத்து, சுகாதார கல்வி, நிதி தொழில்நுட்பம், சூரிய மின்சக்தி போன்ற பல துறைகளில் குறைந்த செலவிலான தீர்வுகளை ஏற்படுத்த நாம் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று திரு பியூஷ் கோயல் கூறினார்.
“நீங்கள் வேகமாக செல்வதற்கு விரும்பினால் தனியாக செல்லுங்கள்; நீங்கள் நீண்ட தூரம் போக விரும்பினால் ஒருங்கிணைந்து செல்லுங்கள்” என்ற ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற பழமொழியை எடுத்துரைத்த அமைச்சர் “நாம் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒருங்கிணைந்து முன்னேறுவோம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
கருத்துகள்