இராணுவத் தலைமைத் தளபதி பூடான் பயணம்
ராணுவ தலைமை தளபதி ஜென்ரல் மனோஜ் பாண்டே, இன்று (29.07.2022) பூடான் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது இந்தப் பயணம், இருநாடுகள் இடையிலான, மிகுந்த நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் அமைந்த, தனித்துவமான மற்றும் காலத்தால் அழிக்கமுடியாத இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.
பூடானின் 3-வது மன்னர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக் நினைவாக அமைக்கப்பட்ட, திம்புவில் உள்ள கார்ட்டன் தேசிய நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, பூடானில் தமது நிகழ்ச்சிகளை ராணுவ தளபதி தொடங்குகிறார். பூடானின் 4-வது மன்னரையும் ராணுவ தளபதி சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், இருநாட்டு ராணும் இடையேயான வலுவான கலாச்சாரம் மற்றும் அலுவல் ரீதியான பிணைப்புகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து, பூடான் ராணுவ தளபதியுடனும் அவர் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது உயிர்த்தியாகம் செய்த பூடான் ராணுவத்தினர் நினைவாக தோச்சுலாவில் அமைக்கப்பட்டுள்ள த்ருக் வாங்கியால் காங் ஜாங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுடன், ராணுவத் தளபதி தமது பயணத்தை நிறைவுசெய்கிறார்.
கருத்துகள்