எஃகு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கடற்கரை சாலையில் மாணவர்கள் பங்கேற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியுடன் ஆர்ஐஎன்எல்-ன் ஐகானிக் வாரக் கொண்டாட்டம் நிறைவடைந்தது
மத்திய எஃகு அமைச்சகத்தின், சுதந்திர தின அமிர்தப் பெருவிழா-வின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினம் எஃகு ஆலையை நிர்வகிக்கும் ஆர்ஐஎன்எல் எனப்படும் இந்திய எஃகு நிறுவனம், 4-10 ஜுலை, 2022 வரை நடத்திய ஐகானிக் வாரக் கொண்டாட்டத்தின் கீழ், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்ஐஎன்எல் ஐகானிக் வாரவிழா, விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில், மாணவர்கள் பங்கேற்ற எஃகு விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை, விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் மனிதவளப் பிரிவு தலைமைப் பொது மேலாளர் திரு.ஜி.காந்தி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். ஆலையின் விளையாட்டுப் பிரிவு பொது மேலாளர் திரு.எம்.எஸ்.குமார், நிதிப் பிரிவு தலைமைப் பொது மேலாளர் திரு.சாந்த குமார், மக்கள் தொடர்பு அதிகாரி திரு.ஆர்.பி.சர்மா, ஆலையின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க (ஏஐடியூசி) தலைவர் திரு.கே.எஸ்.என்.ராவ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கருத்துகள்