முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை மற்றும் புதுக்கோட்டை நிகழ்வுகளில் தெலுங்கானா மாநில ஆளுநர் கலந்து கொண்டார்

வரி செலுத்துவதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும்: ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன


சட்டத்தை எளிமையாக்குவது, காலத்தின் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி

வரி செலுத்துபவராக இருப்பதை நினைத்து பொதுமக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், வருமான வரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல என்று கூறினார். நாம் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கானது என்று தெரிவித்த அவர், 2025-ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா ஈட்ட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் 

பிரதமர் திரு மோடியின் வழிகாட்டுதலோடு, பொதுமக்களுடன் நெருங்கி பணியாற்றுவதற்கான ஏராளமான புதுமையான நடவடிக்கைகளை வருமானவரித்துறை மேற்கொண்டுள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, பலர் தன்னார்வமாக வரி செலுத்த முன்வருவதிலிருந்து இதன் தாக்கம் புலனாகிறது.

வரி செலுத்துபவர்களையும், வருமான வரி அதிகாரிகளையும் நிகழ்ச்சியின்போது கௌரவித்த வருமான வரித் துறைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். வருமான வரி நடைமுறைகளை மேலும் எளிதாக்குமாறு அத்துறையை வலியுறுத்திய அவர், மின்னணு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோரிக்கைவிடுத்தார். வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடையே எடுத்துரைக்குமாறு ஊடகங்களையும் அரசு சாரா அமைப்புகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சட்டங்களை எளிமையாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றார். சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டால் நீதிமன்றங்களின் பணி வெகுவாகக் குறையும் என்றார் அவர்.

வருமான வரித்துறையின் பல்வேறு சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு இல்லங்களில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

வருமான வரித்துறையின் பல்வேறு சாதனைகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் திரு ரவிச்சந்திரன் எடுத்துரைத்தார். நாட்டின் நேரடி வரி வருவாய்க்கு நான்காவது மிகப் பெரிய பங்களிப்பை தமிழகம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.மேலும் மற்றொரு நிகழ்வான புதுக்கோட்டையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்துப் பேசிய தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார் 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் எதிரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையத்தை நேற்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்துப் பேசினார்  நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில்,  ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்குத் தேசியக்கொடிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் 'தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நன்மை நடக்கிறதோ. அங்கெல்லாம் வருவது எனது வழக்கம்.. நான் ஒரு அலோபதிக் டாக்டர் தான். ஆனால் எனக்கு இயற்கை மருத்துவம் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. நமது நாட்டின் 75ஆவது சுதந்திர இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டத்தின் மூலம் நாட்டில் உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால், சமூக நீதி குறித்துப் பேசி வரும் பலரும் கூட இந்தக் குடியரசுத் தலைவரை வேட்பாளராக இருந்த நிலையில்  ஆதரிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நான் தேசியக் கல்விக் கொள்கை குறித்துப் பேசியது தவறாகச் சித்தரிக்கப்பட்டது.  நாம் அனைவரும் கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொன்னதை, இந்தி கற்றுக் கொள்ளும்படி சொன்னதாகத் திரித்துவிட்டனர்.   இணையத்திலும் மனதைக் காயப்படுத்தும் வகையில் பதிவிட்டனர். ஆளுங்கட்சியின் அதிகார நாளேடும், தமிழகத்தில் தமிழிசை ஏன் வாலை ஆட்டுகிறார் என்று கேட்டுள்ளனர். இது என் நாடு, நான் தமிழச்சி, நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். என் உயிர் போனாலும் தமிழகத்தில் தான் போகும்.தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதைப் பற்றிப் பேச எனக்கு முழு உரிமை உள்ளது. என் பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் தமிழ் இருக்கிறது. தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதில், என்னுடைய பங்கு எப்பொழுதும் இருக்கும். ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரம் தேவையில்லை, அதை மதிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு' என்று அவர் தெரிவித்தார். நிகழ்வுகளில் புதுக்கோட்டை பிரமுகர்கள் எஸ் ஆர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் இராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.                               தெலங்கானா மாநில  ஆளுநர் டாக்டர் தமிழிசையிடம் விருது பெற்றுள்ளார், பத்திரிகையாளர் அ.செல்வராஜ்.

சென்னை பிரஸ் கிளப்  தலைவரும், டைம்ஸ் ஆஃப் இன்டியா ஆங்கில நாளேட்டின் க்ரைம் பிரிவு அசிஸ்டன்ட் எடிட்டருமான அ.செல்வராஜூக்கு ‘மனித நேய இதழியலாளர்’ விருது வழங்கப் பட்டுள்ளது. நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் சிறார்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் சிறுமியர், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், அதைத் தொடர்ந்து நடக்கும் கடத்தல் நிகழ்வுகளுக்கு எதிராக அ.செல்வராஜின் ‘பேனாமுனை’ தாக்குதல் எப்போதுமே உறுதியாய் இருந்துள்ளது. நாடு முழுவதும் ஒருமித்த சிந்தனையோடு பெண்கள் – சிறுமியருக்கு எதிரான குற்றச் செயல்களை எதிர்த்தும் அவர்களை பாதுகாக்கும் பொருட்டும் செயல்பட்ட பத்து பத்திரிகையாளர்களை என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று தெரிவு செய்தது. அந்தவகையில் தெரிவு செய்யப்பட்ட. பத்திரிகையாளர்கள் பத்து பேருக்கும், விழாவொன்றில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான திருமதி. டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் விருதுகளை வழங்கி மகிழ்வைத் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன