சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, புலிகள பாதுகாப்பாளர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, புலிகள் பாதுகாப்பாளர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“சர்வதேச புலிகள் தினத்தில், புலிகளை பாதுகாக்க தீவிரமாக பணியாற்றிவரும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். 75 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவில் 52 புலிகள் சரணாலயங்கள் இந்தியாவில் இருப்பது உங்களை பெருமிதப்படுத்தும்.
புலிகள் பாதுகாப்பில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவதற்கான புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்