மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவில்லை எனில் மானியத்தை நிறுத்துவோமென மத்திய அரசு எச்சரிக்கை விடுப்பதாகக் கூறிய மாநில மின்சாரத்துறை அமைச்சர்
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவில்லை எனில் மானியத்தை நிறுத்துவோமென மத்திய அரசு எச்சரிக்கை விடுப்பதாகக் கூறிய மாநில மின்சாரத்துறை அமைச்சர்
செந்தில் பாலாஜி தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூபாய்.1 உயர்த்தவும் பரிசீலனை. வணிக பயன்பாட்டு மின்சாரம் நுகர்வோருக்கு ரூபாய்.50 உயர்த்தவும் பரிசீலனை எனவும், விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு 70 பைசா உயர்த்தவும் பரிசீலனை நடப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் மின் தொடர்புக் கழகத்திற்கு ரூபாய்.43,493 கோடியாகயிருந்த கடன் தொகை கடந்துபோன பத்தாண்டுகளில் மூம் மடங்கு அதிகரித்து தற்போது வரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனவும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உதய் திட்டத்தில் இணைந்தும் தொடர்ந்து இழப்பைச் சந்தித்துள்ளதன் மூலம் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றவர் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு மின் கட்டணத்தை 8 வருட காலம் இடைவெளிக்குப் பிறகு உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை' எனவும் கூறினார். சென்னையில் மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் கூறியதாவது ஒன்றிய மின் துறை ஏழு முறையும், மேல் முறையீட்டு ஆணையம் ஒரு முறையும், ஆர்.இ.பி.சி.எஃப்.சி (REPCFC) ஐந்து முறையும், ஒழுங்குமுறை ஆணையம் 18 முறையுமென ஒட்டு மொத்தமாக 28 முறை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் கட்டணங்களை உயர்த்த வேண்டுமென்று அழுத்தம் கொடுத்துக் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளனன.
அந்த வகையில், இன்று வேறு வழியில்லாமல், குறிப்பாக அதலபாதாளத்தில் இருக்கக்கூடிய மின்சாரத்துறையை மீட்டெடுக்க வேண்டும், தமிழகத்தில் வரக்கூடிய தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மின்சாரத் தேவைகளுக்கேற்ப கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறனை நிறுவி செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இப்போதிருக்கக்கூடிய சொந்த மின்சார உற்பத்தி என்பது வரக்கூடிய ஐந்தாண்டுகளில் 6220 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் மின்சார உற்பத்தியை மின்சார வாரியத்தின் உற்பத்தியுடன் இணைக்க வேண்டுமென்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிலைமைகளில், குறிப்பாக கடந்த அதிமுக எடப்பாடி கே. பழனிச்சாமி ஆட்சியில், சீரழிக்கப்பட்ட மின்சாரத்துறையை பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புமில்லாத வகையில், மேம்படுத்தித் தர வேண்டிய ஒரு கட்டாயச் சூழ்நிலைக்குத், தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது தள்ளப்பட்டிருக்கிற அந்த அடிப்படையில், எந்த வகையிலும் அடித்தட்டு மக்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்புகள் இல்லாத வகையில், மின் கட்டண உயர்வு மாற்றங்களைச் செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை இப்போது நான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன்.
கடந்துபோன பத்து வருடங்களில் மின்சாரத் துறையில் கடன் ரூபாய்.12,647 கோடி உயர்த்த நிலையில்
அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு 100 யூனிட் வரை மின்சாரக் கட்டணமில்லை. 42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை.
இரண்டு மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.
201 யூனிட்கள் முதல் 300 யூனிட் கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூபாய்.72.50 கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களில் 301 முதல் 400 யூனிட் கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய்.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை செய்யப் படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ரூபாய்.297.50 பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களில் 501 யூனிட்கள் முதல் 600 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய்.155 வரை உயரும்.
இரண்டு மாதங்களில் 601 யூனிட்கள் முதல் 700 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய்.275 எனக் கட்டணம் உயரும்.
விசைத்தறிகளுக்கு 750 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். மின்கட்டண ஒழுங்கு முறை ஆணையத்திடம் கட்டண உயர்வு விபரம் ஒப்படைக்கப்பட உள்ளதன் பின்னர் மின் கட்டணம் உயர்த்தப்படுமென அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின்சாரக் கட்டண உயர்வுக்கு பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல சாக்குப்போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின் துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் சிலரை பணக்காரர்களாக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறதென குற்றம் சாட்டியுள்ளார். நீங்கள் செல்லச்செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? எனவும் அண்ணாமலை அதில் வினவியுள்ளார்.
கருத்துகள்