குடியரசுத் தலைவர் செயலகம் பக்ரீத் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து
ஈத் –உஸ்-சுகா எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் சக குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தமது செய்தியில், “ஈத் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து சக குடிமக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பக்ரீத் பண்டிகை மனித குலத்திற்கான தியாகம் மற்றும் சேவையின் அடையாளமாகும். ஹஸ்ரத் இப்ராஹிம் காட்டிய சுய தியாகப் பாதையில் செல்ல இந்த விழா நம்மைத் தூண்டுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், மனித குலத்தின் சேவைக்காக நம்மை மீண்டும் அர்ப்பணித்து, தேசத்தின் செழுமை மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு -
“ ‘பக்ரீத்‘ நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள்.
வழக்கமான உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை, தியாகம் மற்றும் இறைவன் மீதான அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது.
பகிர்ந்து உண்ணுதல் மற்றும் ஏழைகள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.
மக்களை ஒற்றுமைப்படுத்துவதன் மூலம், சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை இந்தப் பண்டிகை வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன்.
பக்ரீத் பண்டிகையுடன் தொடர்புடைய உன்னத இலட்சியங்கள் நம் வாழ்வில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தி, நாட்டிற்கு வளம் சேர்க்கட்டும்“ .என் தெரிவித்தார் தற்போது தமிழக பக்ரீத் பண்டிகைக்கு ஒரு ஆடு 8,000/- என்பது தான் தற்சார்பு பொருளாதாரம். பண்டிகைகள் நிகழ்த்தும் பொருளாதார அருட்கொடை.
விற்பனைச் சந்தைகள் பண்டமாற்றிற்கு உருவாகி இன்று வரை நிற்கிறது. தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி எட்டயபுரம் மற்றும் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சந்தையில் மட்டும் 8 1/2 கோடி ரூபாய் காலை 8 மணிக்குள் சாமானிய மக்களுக்குப் புரண்டிருக்கிறது. உற்பத்தியாளனை விட வியாபாரிக்கு அதிகமான பங்கு லாபம் இருக்கும்.
வணிகம் என்றுமே மதம் பார்ப்பதில்லை. உண்பவனும் மதம் பார்பதில்லை.
எங்கு இருந்து மதம் பரவுகிறது என்பதை தொடர்ந்து கவனித்து வந்தால் புரிந்து கொள்ள முடியும்.
கருத்துகள்