முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“பாடு, நடனமாடு, பிரார்த்தனை செய் - ஸ்ரீல பிரபுபாதாவின் உத்வேகம் தரும் கதை” என்ற புத்தகத்தை வெளியிட்ட குடியரசுத் துணைத் தலைவர்

ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் – குடியரசு துணைத்தலைவர்

ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய  உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது என்று குடியரசு துணைத்தலைவர்  திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.  இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் என அவர் கூறினார்.

குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,  “பாடு, நடனமாடு,  பிரார்த்தனை செய் - ஸ்ரீல பிரபுபாதாவின் உத்வேகம் தரும் கதை” என்ற புத்தகத்தை வெளியிட்ட பின்னர் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுவாமி பிரபுபாதா போன்ற சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து உத்வேகம் பெறவும், அவர்களின் குணங்களை இளைஞர்கள் உள்வாங்கவும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம் எனக்கூறிய அவர்,  "நீங்கள் எப்போதும் சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் என்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் உயர்ந்து சமுதாயத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டுவர உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை  டாக்டர் ஹிந்தோல் சென்குப்தா எழுதியுள்ளார்.

பகவத் கீதையின் போதனைகளை  உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய ஸ்ரீல பிரபுபாதரைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவரை நவீன யுகத்தில் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் சிறந்த தூதர்களில் ஒருவர் எனப்புகழ்ந்துரைத்தார். ஆன்மிகம் நமது மிகப் பெரிய பலம் என்று கூறிய அவர், பண்டைய காலங்களிலிருந்து ஆன்மீகமே நமது தேசத்தின் ஆன்மாவாகவும், நமது நாகரிகத்தின் அடித்தளமாகவும் உள்ளது என்றார். நமது பண்டைய வேதங்களின் ஆழ்நிலை ஆன்மிக மதிப்பைப் பாராட்டிய திரு நாயுடு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களின் அடிப்படையில் ஒரு லட்சிய வாழ்க்கையை நடத்த மக்களை வழிநடத்தும் கையேடுகளாக அவை உள்ளன என்று கூறினார். “நமது வேதமான பகவத் கீதை, மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நுண்ணறிவுத் தீர்வுகளை வழங்குகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவை பக்தி பூமி என்று கூறிய திரு நாயுடு, பக்தி என்பது இந்தியர்களின் நாடி, நரம்புகளில் பின்னிப் பிணைந்துள்ளதாகவும், இந்தியாவின் கூட்டு நாகரீக உணர்வின் உயிர்நாடி அது என்றும் கூறினார். இந்தியாவின் பல ரிஷிகள், முனிவர்கள் மற்றும் ஆச்சார்யர்கள், மதச்சார்பற்ற, உலகளாவிய வழிபாட்டு முறையின் மூலம் மக்களை உயர்த்தியதை சுட்டிக்காட்டிய திரு நாயுடு, “உலகமே ஒரே  குடும்பம்” என்ற செய்தியைப் பரப்பியதற்காக ஸ்ரீலபிரபுபாதரைப் பாராட்டினார்.

ஸ்ரீலபிரபுபாதாவை சமத்துவ சிந்தனையின் ஜோதியாக வர்ணித்த குடியரசு துணைத் தலைவர், சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை அரவணைத்து அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்ததாகக் கூறினார். வேத அறிவு மற்றும் கலாச்சாரத்தின் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஸ்ரீல பிரபுபாதரின் அயராத முயற்சிகளைப் பாராட்டிய திரு நாயுடு, "அவர் வலியுறுத்திய ஒரே அளவுகோல் பக்தி அல்லது கடவுளின் அன்பு" என்று கூறினார். தனது குருவின் பணியை முன்னெடுத்துச் செல்வதில் பெங்களூரு இஸ்கான் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ மது பண்டிட் தாஸின் முயற்சிகளையும் குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.

கிருஷ்ணர் கோவிலின் பத்து மைல் சுற்றளவில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற சுவாமி பிரபுபாதாவின் விருப்பத்தை நினைவுகூர்ந்த குடியரசு  துணைத்தலைவர், இஸ்கானின் அற்புதமான சேவை மனப்பான்மையைப் பாராட்டினார். இந்த சேவை உணர்வும், பகிர்தல் மற்றும் அக்கறையும், இந்திய விழுமியங்களின்  மையமாகும் என்று  குறிப்பிட்ட திரு நாயுடு, இளைஞர்கள் இந்த விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  இந்த நோக்கத்திற்காக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சமூக சேவையைக் கட்டாயமாக்க அவர் பரிந்துரைத்தார். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சமூகங்களுக்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கியதற்காக - உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளி மதிய உணவுத் திட்டமான - இஸ்கான் தலைமையிலான அட்சய பாத்திரம் அறக்கட்டளையை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.

 டாக்டர் ஹிண்டோல் சென்குப்தாவின் இந்த நூல் வெளியீடு,  ஸ்ரீல பிரபுபாதரின் 125 வது பிறந்தநாளில் அவருக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலி என்று திரு நாயுடு குறிப்பிட்டார். இந்தக் கொள்கையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க இந்த வாழ்க்கை வரலாறு அதன் வாசகர்களை ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்நூலை பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்குமாறு ஆசிரியரையும் பதிப்பாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இஸ்கான் பெங்களூருவின் தலைவரும், அட்சய பாத்திரம் அமைப்பின்  தலைவருமான திரு மது பண்டிட் தாசா, துணைத் தலைவர் திரு சஞ்சலபதி தாசா, நூலாசிரியர், இஸ்கான் பக்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...