முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராணி லட்சுமிபாய், ராணி வேலுநாச்சியார் பெண்களின் வலிமையான பங்களிப்பை பெருமளவில் உயர்த்தினார்கள்.பதவியேற்ற ஜனாதிபதி உரை

இந்திய குடியரசு தலைவராக பதவியேற்றுக்கொண்ட திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய உரை

வணக்கம்!

இந்திய அரசியலமைப்பின் உயர்ந்த பதவிக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வ நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் எனக்கு அளித்த வாக்கு, நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடிமக்களின் நம்பிக்கையை  வெளிப்படுத்துகிறது என்றார்.

இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் உரிமைகளின் அடையாளமான இந்த புனிதமான நாடாளுமன்றத்தில் இருந்து அனைத்து குடிமக்களையும் நான் பணிவுடன் வாழ்த்துகிறேன்.

உங்களுடைய அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவு ஆகியவை என் பணிகள் மற்றும் கடமைகளை செய்வதற்கு, சிறந்த வலுசேர்க்கும்.

விடுதலை பெருவிழாவை நாம் கொண்டாடி வரும் இந்த முக்கிய தருணத்தில், குடியரசுத் தலைவராக என்னை நாடு தேர்ந்தெடுத்துள்ளது என்றார்.

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் நாடு, 75- வது சுதந்திர ஆண்டை நிறைவு செய்யவுள்ளது.  

நாட்டின் 50 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது, என் அரசியல் வாழ்க்கையை  நான் தொடங்கியதும் தற்செயலாக அமைந்தது.

75-வது சுதந்திர ஆண்டு கொண்டாடப்படும் வேளையில், இன்று நான் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டேன்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் முழு உத்வேகத்துடன் ஈடுபட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த சிறந்த கௌரவமாகும்.

சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவராக நான் இருக்கிறேன்.

சுதந்திர இந்தியாவின் குடிமக்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், இந்த விடுதலை பெருவிழா கொண்டாட்டத்தில்  நாம் விரைவாக பணியாற்ற வேண்டும்.

அடுத்த 25 ஆண்டுகளில் அனைவருடைய முயற்சி மற்றும் அனைவருடைய கடமை என்ற  அடிப்படையில், விடுதலை பெருவிழாவின் நோக்கங்களை அடைய வேண்டும்.

நமது கூட்டு முயற்சியால், கடமையாற்றி, இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய புதிய வளர்ச்சிப் பயணத்தை அடைய வேண்டும்.

ஜூலை  26- ஆம் நாளான நாளை, நாம் கார்கில் வெற்றி தினத்தை கொண்டாட உள்ளோம்.

இந்த தினம், இந்திய ஆயுதப்படையினரின் துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாக திகழ்கிறது.

நாட்டின் ஆயுதப்படையினர் மற்றும் அனைத்து ஆண், பெண்  குடிமக்களுக்கும், நான் இன்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள ஒடிசாவின் சிறிய பழங்குடியினர் கிராமத்தில் எனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினேன்.

ஆரம்ப கல்வியை கற்பதே, கனவாக இருந்த பின்னணியில் இருந்து நான் வந்துள்ளேன்.

பல சிரமங்கள் இருந்தாலும், என்னுடைய உறுதிப்பாடு வலிமையாக இருந்தது. நான் தான் எனது கிராமத்திலிருந்து கல்லூரிக்கு சென்ற முதல் பெண்.

நான் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவள். வார்டு கவுன்சிலராக இருந்த எனக்கு, இந்திய குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது. இது தான் இந்தியாவின், ஜனநாயகத்தின் சிறப்பாகும்.

ஊரக பழங்குடியின பகுதியில் ஏழை வீட்டின் மகளாக பிறந்தவள், இந்திய அரசியலமைப்பின் உயர்ந்த பதவியை அடைய முடியும் என்பதே நமது ஜனநாயகத்தின் வலிமையாகும்.

குடியரசு தலைவர் பதவியை அடைந்தது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. இது இந்தியாவின் ஒவ்வொரு ஏழை மக்களின் சாதனையாகும்.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம்,  இந்தியாவில் உள்ள ஏழை மக்களும், கனவு கண்டு அதை அடைய முடியும் என்பது நிருபணமாகியுள்ளது.

நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களும், வளர்ச்சியின் பலன்களை மறுக்கப்பட்டவர்களும், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் பிரதிபலிப்பை என்னிடையே காண்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது.

நாட்டின் ஏழைகளின் ஆசிர்வாதத்தால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் மகள்களின் கனவுகளையும், சாத்தியக் கூறுகளையும் இது பிரதிபலிக்கிறது.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், புதிய பாதையில் செல்ல  விரும்பும் இந்திய இளைஞர்களின் துணிச்சலையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்று செழுமையான இந்தியாவிற்கு தலைமை தாங்குவதற்காக நான் பெருமையடைகிறேன்.

இந்த பதவியில் பணியாற்றும் எனக்கு, இந்திய பெண்கள், குறிப்பாக,  இளைஞர்கள் ஆகியோரின் நலன்கள் முதன்மையாக இருக்கும் என்று அனைத்து சக குடிமக்களுக்கும் நான் இன்று உறுதியளிக்கிறேன்.  

சகோதர,  சகோதரிகளே,

உலகின் இந்திய ஜனநாயகத்தின் மதிப்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டிய  பொறுப்பு எனக்கு உள்ளது.

நாட்டின் முதலாவது குடியரசுத்தலைவர்  டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் திரு ராம்நாத் கோவிந்த் வரை இப்பதவியை அலங்கரித்துள்ளனர்.

இந்தப் பதவியுடன், பெரிய பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பையும், கடமையையும்  நாடு என்னிடம் ஒப்படைத்துள்ளது.

அரசியலமைப்பு சட்டப்படி, எனது கடமைகளில் மிகுந்த நேர்மையுடன் செயலாற்றுவேன்.

என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் ஜனநாயக - கலாச்சார சிந்தனைகள் மற்றும் அனைத்து குடிமக்களும் எப்பொழுதும் என்னுடைய சக்தியின் ஆதாரமாக இருக்கும்.

சகோதர, சகோதரிகளே,

நமது சுதந்திரப் போராட்டம் ஒரு நாடாக, இந்தியாவின் புதிய பயணத்திற்கான வழிகாட்டுதல்களை  தயார் செய்திருந்தது.

சுதந்திர இந்தியாவுக்கான பல சிந்தனைகளையும், சாத்திய கூறுகளையும் உள்ளடக்கிய போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் தொடர்ச்சியாக நமது சுதந்திரப் போராட்டம் இருந்தது.

பூஜ்ய பாபு ஸ்வராஜ், சுதேசி, ஸ்வச்தா மற்றும் சத்தியாகிரகம் மூலம் இந்திய கலாச்சார சிந்தனைகளை உணர வழி காட்டினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேரு ஜி, சர்தார் படேல், பாபாசாகேப் அம்பேத்கர், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத் போன்ற எண்ணற்ற ஆளுமைகள் நாட்டின் பெருமையை முதன்மையாக எண்ண கற்றுக்கொடுத்தனர்.

ராணி லட்சுமிபாய், ராணி வேலுநாச்சியார், ராணி கைடின்லியு, ராணி சென்னம்மா போன்ற வீரமிக்க பெண்கள், நாட்டை பாதுகாப்பதிலும், கட்டமைப்பதிலும் பெண்களின் வலிமையான பங்களிப்பை பெருமளவில் உயர்த்தினார்கள்.

சந்தால் புரட்சி, பைகா புரட்சி முதல் கோல் புரட்சி மற்றும் பில் புரட்சி வரை, அனைத்து புரட்சிகளும் சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை வலுப்படுத்தியது.

சமூக மேம்பாடு மற்றும் தேசபக்திக்காக 'தர்தி ஆபா' பகவான் பிர்சா முண்டா ஜியின் தியாகத்திலிருந்து நாம் உத்வேகம் பெற்றோம்.

நமது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின சமுதாயத்தினரின் பங்களிப்பை  அங்கீகரித்து நாடு முழுவதும் பல அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

சகோதர, சகோதரிகளே.

75 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயகம் மூலம், பங்கேற்பு மற்றும் ஒருமித்த கருத்து மூலம் வளர்ச்சியை இந்தியா முன்னெடுத்துச் சென்றுள்ளது.

பன்முகத்தன்மைகள் நிறைந்த நம் நாட்டில், ஒரே பாரதம்- உன்னத பாரதம் என்ற நெறிமுறைகள் மூலம் பல மொழிகள், மதங்கள், பிரிவுகள், உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை கொண்டுள்ளோம். 

நமது சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் தொடங்கும் இந்த அமிர்தகாலம், இந்தியாவின் புதிய வளர்ச்சியின் காலமாகும்.

இன்று எனது நாடு உத்வேகம் பெற்று, புதிய சிந்தனையுடன் புதிய சகாப்தத்தை வரவேற்கத் தயாராக இருப்பதை நான் காண்கிறேன்.

இன்று இந்தியா ஒவ்வொரு துறையிலும், வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை கண்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில்  உலக அளவில் நிலவிய  நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள், உலகம் முழுவதும் இந்தியாவின் நம்பகத்தன்மையை மேம்படுத்தியது.

இந்தியர்களாகிய  நாம், சர்வதேச சவால்களை மட்டும் எதிர்க்கொள்ளாமல், உலகத்திற்கான புதிய தரத்தை வடிவமைத்தோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்த போராட்டத்தில் இந்திய மக்கள் காட்டிய பொறுமை, துணிச்சல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை ஒரு சமுதாயமாக நமது வளர்ந்து வரும் வலிமையின் அடையாளமாகும்.

இந்த கடினமான சூழ்நிலையிலும், இந்தியா தன்னைத்தானே காத்துக்கொண்டதோடு அல்லாமல்,  உலகிற்கும் உதவியது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு மூலம் உலக நாடுகள் இன்று இந்தியாவை புதிய நம்பிக்கையாக பார்க்கிறது.

உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை, விநியோகம், அமைதி ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியாவின் மீது, சர்வதேச சமுதாயம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

அடுத்து வரும் சில மாதங்களில், ஜி-20 நாடுகளின் மாநாட்டில் இந்தியா தலைமை ஏற்கவுள்ளது.

இந்தியாவின் தலைமையின் கீழ், இக்குழுமத்தில் உள்ள 20 பெரிய  நாடுகள்,   உலகின்  நிலவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளன.

இந்தியாவின் முடிவுகளும், கொள்கைகளும் வருங்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என்று நாம் நம்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

பல வருடங்களுக்கு முன்பாக,  ரெயிராங்கூரில் உள்ள ஸ்ரீ அரவிந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இன்னும் சில நாட்களில் ஸ்ரீ அரவிந்தரின் 150 வது பிறந்த தினத்தை நாம் கொண்டாட உள்ளோம்.

கல்வி குறித்த ஸ்ரீ அரவிந்தரின் சிந்தனைகள் எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

கல்வி நிறுவனங்களிலும், பல்வேறு நிலைகளில் மக்கள் பிரதிநிதியாகவும், ஆளுநராகவும் நான் பணியாற்றியுள்ளேன்.

நாட்டின் இளைஞர்களின் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் நான் கண்டுள்ளேன்.

நாட்டின் இளைஞர்கள் முன்னேற்றம் அடையும்போது, அவர்கள் தங்கள் தலைவிதியை மட்டுமல்லாமல், நாட்டின் தலைவிதியையும் வடிவமைக்கிறார்கள் என்று நமது மதிப்பிற்குரிய அடல்ஜி கூறுவார்.

இது இன்று உண்மையாவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் முதல் டிஜிட்டல் இந்தியா வரை ஒவ்வொரு  துறையிலும் முன்னேறி வருவதன் மூலம் உலக நாடுகளுடன் நான்காவது தொழில்புரட்சியை நோக்கி இந்தியா செல்கிறது.

பெருமளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பல்வேறு புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இந்திய இளைஞர்கள் மிகப் பெரிய பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக  மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் மற்றும் வகுக்கப்பட்ட கொள்கைகளால் நாட்டில் ஒரு புதிய சக்தி ஏற்பட்டுள்ளது.

அனைத்து சகோதரிகளும், மகள்களும், மென்மேலும் அதிகாரம் பெறுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம், நாட்டை கட்டமைப்பதில், ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து அவர்களது பங்களிப்பை அதிகரிக்க முடியும்.

உங்களுடைய  எதிர்காலத்தை மட்டும் நீங்கள் கட்டமைக்கவில்லை. இந்திய எதிர்காலத்திற்கு அடித்தளமிடுகிறீர்கள் என்று நம் நாட்டின் இளைஞர்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

நாட்டின் குடியரசுத் தலைவராக நான் எப்போதும், முழு ஒத்துழைப்பை நான் உங்களுக்கு அளிப்பேன்.

சகோதர, சகோதரிகளே,

வளர்ச்சி மற்றும் மேம்படுவது என்பது, தொடர்ந்து முன்னோக்கி செல்வதாகும்.  ஆனால் ஒருவரின் கடந்த காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு முக்கியமானதாகும்.

இன்று, நீடித்த தன்மை குறித்து உலகில் பேசப்படும் போது, இந்தியாவின் பழங்கால பாரம்பரியங்கள் மற்றும் நிலையான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியமானது.

ஆயிரக்கணக்கான வருடங்களாக இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்த பழங்குடியின பாரம்பரியத்தில் நான் பிறந்தேன்.

காடுகள் மற்றும் நீர் நிலைகளின் முக்கியத்துவதை என் வாழ்க்கையில் நான் உணர்ந்துள்ளேன்.

இயற்கையிலிருந்து தேவையான வளங்களை அனுபவித்து அதற்கு சமமான அளவில் நாம் சேவை செய்கிறோம்.

இது இன்று உலக அளவில் இன்றியமையாததாகி விட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

சகோதர, சகோதரிகளே,

எனது வாழ்க்கையில் இதுவரை பொதுப்பணிகள் மூலமாகவே, வாழ்க்கையின் அர்த்தத்தை நான் உணர்ந்துள்ளேன்.

ஸ்ரீ ஜகந்நாத் க்ஷேத்திரத்தின் புகழ்பெற்ற கவிஞரான பீம் போய் ஜியின் கவிதையிலிருந்து ஒரு வரி உள்ளது-

"மோ ஜீபன் பச்சே நர்கே படி தௌ, ஜகதோ உத்தர் ஹேயு".

ஒருவரின் தனிப்பட்ட நலனை விட, உலகின் நலனுக்காக  பாடுபடுவதே சிறந்தது என்பது  அதன் அர்த்தமாகும்.

உலக நலனுடன், நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்ட முழு அர்ப்பணிப்புடனும், பணியாற்ற நான் எப்போதும் தயாராக இருப்பேன்.

பெருமை வாய்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி முன்னேறுவோம்.

நன்றி,

ஜெய்ஹிந்த்!குடியரசுத் தலைவர் பதவிக்காலம் இனிதாக அமைய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் வாழ்த்து

குடியரசுத் தலைவர் பதவிக்காலம் இனிதாக அமைய  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இவரது பதவிக்காலம் இந்தியாவுக்கு குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மக்கள், அடித்தள மக்கள் ஆகியோருக்கு வளர்ச்சிக்கான மாற்றத்தின் காலமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.  இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவை கொண்டாடும் காலத்தில் குடியரசுத் தலைவரின் பதவியேற்பு உரை இந்தியாவின் வளர்ச்சியை வலியுறுத்தியதோடு, தொலைநோக்கு பார்வையுடன் எதிர்காலத்தின் பாதையையும் காட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

     பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

     “இந்தியாவின் குடியரசுத் தலைவராக திருமதி திரௌபதி முர்மு அவர்கள் பதவியேற்றதை ஒட்டுமொத்த தேசமும் பெருமையுடன் பார்த்தது.   இவர், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும் காலம் இந்தியாவுக்கு குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மக்கள், அடித்தள மக்கள் ஆகியோருக்கு வளர்ச்சிக்கான மாற்றத்தின் காலமாக இருக்கும்.  இவரது குடியரசுத் தலைவர் பதவிக்காலம் வெகு சிறப்புடன் இனிமையானதாக இருக்க நான் வாழ்த்துகிறேன்.”

பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பின் தமது உரையில், நம்பிக்கை மற்றும் கருணையின் செய்தியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கியிருக்கிறார். இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவை கொண்டாடும் காலத்தில் அவர், இந்தியாவின் வளர்ச்சியை வலியுறுத்தியிருப்பதோடு, தொலைநோக்கு பார்வையுடன் எதிர்காலத்தின் பாதையையும் காட்டியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,