ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே ஷின்சோ மீதான தாக்குதல் குறித்து பிரதமர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே ஷின்சோ மீதான தாக்குதல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“எனது இனிய நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன். எங்களின் நினைவுகளும், பிரார்த்தனைகளும் அவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஜப்பான் மக்கள் மீதும் உள்ளன. "எனது நண்பர் அபே சான்' - ஷின்சோ அபேவு மறைவுக்கு பிரதமர் அஞ்சலி
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"திரு. அபேயின் மறைவில், ஜப்பானும் உலகமும் ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வையாளரை இழந்துவிட்டன. மேலும், நான் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன்.
என் நண்பர் அபே சானுக்கு அஞ்சலி..."
"நான் அபே சானை முதன்முதலில் 2007 இல் சந்தித்தேன், அதன் பிறகு, நாங்கள் பல மறக்கமுடியாத தொடர்புகளை வைத்திருந்தோம். அவை ஒவ்வொன்றையும் நான் போற்றுவேன். அபே சான் இந்தியா-ஜப்பான் உறவை ஊக்குவித்தார். புதிய இந்தியா அதன் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும்போது ஜப்பான் அருகே இருப்பதை அவர் உறுதி செய்தார்’’.
"உலகளாவிய தலைமைத்துவத்தைப் பொறுத்த வரையில், அபே சான் அவரது காலத்தை விட முன்னேறிச் சென்றார். குவாட், ஆசியான் தலைமையிலான மன்றங்கள், இந்தோ பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி, ஆசியா-ஆப்பிரிக்கா வளர்ச்சி பாதை மற்றும் பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி அனைத்தும் அவரது பங்களிப்புகளால் பயனடைந்தன. "ஜப்பானின் முன்னாள் பிரதமர் திரு ஷின்சோ அபே-யின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது
ஜப்பானின் முன்னாள் பிரதமர் திரு ஷின்சோ அபே, 2022, ஜூலை 8 அன்று மரணமடைந்தார். மறைந்த தலைவருக்கு செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிப்பதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக தேசிய கொடி பறக்கும் அனைத்து கட்டிடங்களிலும் துக்கம் அனுசரிக்கும் தினத்தன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இந்நாளில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது.
கருத்துகள்