ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியிலிருந்து நீக்குவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன் கண்டனம்
அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியிலிருந்து நீக்குவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மகனும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத்தை கட்சியிலிருந்து நீக்கியதாக எடப்பாடி கே.பழனிச்சாமி கடிதம் எழுதிய நிலையில் சசிகலா நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:-.
நாடாளுமன்றத்தில் அதிமுக பெயரைச் சொல்ல யாருமே வேண்டாம் என்ற கண்மூடித்தனமான முடிவு நியாயமற்றது. மேலும் ரவீந்திரநாத் எம்.பி.யை செயல்படவிடாமல் தடுத்து வைப்பது தவறானது. தன சொந்த விருப்பத்திற்காக நாடாளுமன்றத்தின் மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அளிக்க நினைப்பதா? என்றும்
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்களென்று சொல்பவர்களை கட்சித் தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள். ஒரு மரத்தின் உச்சியில் உக்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகின்ற அறிவற்ற செயலே இவர்களுடையது. இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை, பதவியினை தட்டிப் பறிக்க வேண்டும் என செயல்படுவர்களை பற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டுமென பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள்