புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழா
டில்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 2022 ஜூலை மாதம் 25 ஆம் தேதி, இன்று காலை 10.15 மணிக்கு நடைபெறுகிறது.
மாநிலங்களவைத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், தூதரகத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டார்கள்.
குடியரசுத் தலைவரும், குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவரும் அணிவகுப்பு மரியாதையுடன் மைய அரங்கிற்கு வந்தார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் பதவி ஏற்றுக்கொண்டார் பிறகு, 21 குண்டுகள் முழக்கங்களுடன் வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினர். மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவின் நிறைவாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுகிறது.
கருத்துகள்