இசைஞானி இளையராஜா மற்றும் பிடி உஷா உள்ளிட்டவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார்
நாடாளுமன்ற மாநிலங்களவையின் 12 உறுப்பினர்களை நியமன உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர் நேரடி நியமனம்.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவைகள் துறையில் சிறப்பாக விழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் உறுப்பினராக நியமனப் பதவியை வழங்கி மத்திய அரசு கௌரவிக்கிறது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்ளிட்ட ஐவர் முன்பே நியமன உறுப்பினர்கள்களாக உள்ளனர்.
தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இசைஞானி இளையராஜாவை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
இசைத்துறையில் அவர் செய்த சாதனைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நிலையில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி வழங்கியதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.79 வயதாகும் இளையராஜா இசைத்துறையில் வழங்கி வரும் தொடர் பங்களிப்புக்காக இதுவரை ஐந்து முறை தேசிய விருது பெற்றவர். சாகர சங்கமம், ருத்ர வீணா என இரு தெலுங்கு திரைப்படத்துக்கும், சிந்து பைரவி தமிழ் திரைப்படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். பழசிராஜா மற்றும் தாரை தப்பட்டை படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும்,
2018 ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'படைப்பு மேதை இளையராஜா ஜி பல்வேறு தலைமுறைகளாக மக்களை கவர்ந்தவர். அவரது பாடல்கள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து சாதித்திருக்கும் அவரது வாழ்க்கை பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. அவர் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று புகழாரம் சூட்டி இருந்தார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரைத்துறையில் பல்வேறு அமைப்புகள் பாராட்டியுள்ளனர். ஒரே தந்தைக்கும் இருவேறு தாய்க்கும் மகனாகப் பிறந்த பாவலர் வரதராஜன் தம்பி ஆரம்ப கம்யூனிஸ்ட் பன்னைபபுரம் கரியமனம்பட்டி கங்கானி மகன் அடித்தள மக்களின் இராகதேவன் "ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை
அடுத்தவனைக் கெடுத்ததில்லை
வயித்துல தான் அடிச்சதில்லலை
உழைப்பு நம்பி பொழச்சிருக்கிறேன்
நான் உண்மையாக ஊருக்குள்ள" மக்கள் மனதில் பாடல்கள் மூலம் வென்ற இளையராஜா மற்றும் ஓடியதால் வென்ற பிடி உஷா. இருவரும் மக்கள் அறிந்த முகம் இளையராஜாவின் உயரம் அவர் மக்கள் மனதில் வீற்றிருக்கும் சிம்மாசனம். இவை எல்லாம் அவரை கொச்சை படுத்தி விமர்சனம், நக்கல் நையாண்டி செய்பவர்கள் எந்த அளவுக்கு அதல பாதாள இடத்தில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து விடும்.
பரிதாபம் மட்டுமே மிஞ்சுகிறது.
இந்த கௌரவம் அவருக்கு போதாது என்று சொல்பவர்கள் இது வரை எந்த அரசும் அவரை கண்டு கொண்டது கூட இல்லை என்கிற அடிப்படை நியாயத்தை மறந்தும் சொல்வது இல்லை. ஒரு தமிழனாக நல்ல கலைஞனான இசைஞானிக்கு நமது பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வாழ்த்துக்கள்
மேலும் கேரளாவில் கோழிக்கோட்டின் வீராங்கனை பி.டி.உஷா 13 வயதில் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்று 100 மீட்டத்தில் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தவர். ஆசியப்போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்றவர் பி.டி.உஷா, மத்திய அரசிடன் அர்ஜுனா விருதையும், பத்மஸ்ரீ விருதையும், சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருதையும், ஆசிய விருதையும், உலகக்கோப்பையை, சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் சிறந்த தடகள விளையாட்டு விராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருதுகள் பெற்றுள்ளார் பி.டி. உஷா.
மேலும் 80 வயதில் விஜயயேந்திர பிரசாத் ஆந்திரப் பிரதேசம் கொவ்வூரில் பிறந்தவர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி திரையுலகில் பணியாற்றியவர், இந்தியாவின் தலை சிறந்த திரைக்கதை ஆசிரியராவார். அவரது மகன் தான் ராஜமவுலி அவர் இயக்கிய மாவீரன், நான் ஈ, பாகுபலி முதல் பாகம், பாகுபலி 2 ஆம் பாகம், RRR என ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த அனைத்து திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதியவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் தான். நந்தி விருது, பிலிம்பேர் விருது, சோனி கில்டு விருதையும் பெற்றுள்ளார்.
மற்றும் கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலாவின் தர்மாதிகாரியாக கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொறுப்பு வகித்து வருகிறார். கலை மற்றும் இலக்கிய புரவலரான இவர், மஞ்சுவனி என்ற மாத இதழையும் வெளியிடுகிறார். இயற்கை மருத்துவம், யோகா, அறநெறிக் கல்வியை பரப்பும் வகையில் 400 பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், முப்பதாயிரம் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் பயிற்சியளிக்கிறார். 10000 க்கும் அதிகமான இலவசத் திருமனங்களை நடத்தி வருகிறார், கிராம வளர்ச்சி, ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காகவும் உதவுகிறார். பத்ம பூஷன், பத்ம விபூஷன், இராஜரிஷி, கர்நாடக ரத்னா, இந்திய வர்த்தக சம்மேளன விருது போன்றவற்றை இவர் பெற்றுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்து
கருத்துகள்