பா ஜ க வின் குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளர் திரௌபதி முர்மு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஆதரவு கோருகிறார்,
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளர் திரௌபதி முர்மு, சென்னை வருகிறார்.. அஇஅதிமுக மற்றும் பாஜக வின் கூட்டணிக் கட்சிகளின் சட்ட மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, திரௌபதி முர்மு ஆதரவு கோருகிறார்.
ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சா டயட்ர்பில் அஇஅதிமுக மற்றும் பாமக வின் நாடாளுமன்ற க்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு பெற உள்ளார். இந்த சந்திப்பானது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கான திட்டமிடல் தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடுகள் செய்துள்ளது.. சென்னை வருவதற்கு முன்பாக, புதுச்சேரிக்கு செல்லும் வேட்பாளர் திரௌபதி முர்மு அங்குள்ள கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்தில் அஇஅதிமுகதான் பிரதான ஆதரவு தரும் கட்சியாக பாஜகவிற்குள்ளது..
ஆனால் அஇஅதிமுகவில் தற்போதைய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், எடப்பாடி கே.பழனிச்சாமி இவர்கள் இருவருமே தற்போது பிளவுபட்டு நின்றாலும் திரௌபதி முர்முவை, இவர்கள் இருவரும் தனித்தனியாக சந்தித்தாலும் ஆதரவு நிலையில் ஒன்று தான் வேட்பாளராக உள்ள திரௌபதி முர்மு இன்று நன்பகல் 1:30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் 2:00 மணிக்கு சென்னை வருபவருக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நுங்கம்பாக்கத்திலுள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாலை 4:00 மணிக்கு பாரதிய ஜனதா கட்சி - அஇஅதிமுக - பாட்டாளி மக்கள் கட்சி - தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு கோரவுள்ளார். மீண்டும் மாலை 5:00 மணிக்கு தனி விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார்.
கருத்துகள்