தொழிலாளர்புலம் பெயர்தல் குறித்த ஆலோசனை: மீட்சிபெறுதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதலில் இந்தியாவில்நீடிக்க வல்ல கொள்கைகள் மற்றும் நிறுவனங்களின் முன்னேற்றம், அனைவருக்கும்கண்ணியமான வேலையை ஊக்குவி்த்தல்” பற்றிய கூட்டத்திற்குசர்வதேச தொழிலாளர் அமைப்பு புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது
“தொழிலாளர் புலம் பெயர்தல் குறித்த ஆலோசனை: மீட்சிபெறுதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதலில் இந்தியாவில் நீடிக்க வல்ல கொள்கைகள் மற்றும் நிறுவனங்களின் முன்னேற்றம், அனைவருக்கும் கண்ணியமான வேலையை ஊக்குவி்த்தல்” பற்றிய கூட்டத்திற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. 2022 ஜூலை 28, 29 தேதிகளில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்நாட்டிற்குள்ளும், சர்வதேச அளவிலும் சிறந்த பொருளாதார வாய்ப்புகளுக்காக புலம் பெயர்ந்து செல்கிறார்கள். இதனால் தொழிலாளர்கள் புலம் பெயர்தலுக்கு தீர்வு காண எந்தவொரு நாடும் முன்னுரிமை அளிப்பது முக்கியமாகும்.
இன்று நடைபெற்ற தொடக்க அமர்வில், மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார். புலம் பெயர்தல் என்பது உலகளாவிய பொருளாதார சமூக அரசியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள், தொடர்புடையது என்று அவர் பேசுகையில் கூறினார். பாதுகாப்பான, ஆரோக்கியமான, பணிச்சூழல், அனைவருக்கும். கண்ணியமான வேலை, ஒவ்வொரு தொழிலாளருக்கும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டு விவாதத்தின் அடிப்படையில், மத்திய அரசு முற்போக்கான தொழிலாளர் சீர்திருத்த கட்டமைப்பை செயல்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
சவால்களை வரையறை செய்துள்ள அளவில் அவற்றுக்கு சாத்தியமான தீர்வுகளையும் அடையாளம் கண்டு அவற்றின் மீது தீவிரமாக செயல்பட உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தரமான வேலை, போதிய சுகாதாரம், சத்துணவு, அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பு வழங்கப்ட்டால், புலம் பெயரும் தொழிலாளர்கள் பொருளாதார பயன்பாட்டிற்கு உதவி செய்வார்கள் என்று இந்தக் கூட்டத்தில் பேசிய ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான ஐஎல்ஓ இயக்குநர் திரு சிஹோகோ அசாடா மியாகாவா குறிப்பிட்டார். முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் உருவாக்கப்பட்ட, நிறுவன அடிப்படையிலான உத்தி முறைகள் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பணி நிலைமைகளை மேம்படுத்த ஐஎல்ஓ உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கருத்துகள்