உச்ச நீதிமன்றத்தால் விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்ட நிலங்களை மோசடியாகப் பதிவு செய்துகொள்ள
எழுத்துப்பூர்வமாக அனுமதித்த கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து வழக்குப் போட்டு விசாரிக்காமல் சார் பதிவாளர்களை ஒருமையில் திட்டுவதால் என்ன பயன் என்று அமைச்சர் மூர்த்தி அவர்களை மக்கள் கேட்கும் நிலையில்
உங்கள் நேர்மையான சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து நிரூபிக்க வேண்டிய நிலையில் தற்போது பூதாகரமாக இந்த ஊழல் வெளிவந்த நிலையில் பதிவுத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கம் தமிழ்நாட்டில் செபி கட்டுப்பாட்டிலுள்ள
PACL நிலங்களைப் பத்திர பதிவு செய்த சார் பதிவாளர்கள் பணியிடை நீக்கம் தமிழக அரசின் கணக்கில் 7000 ஏக்கர் நிலங்கள் மோசடி ஆவணங்கள் வைத்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் துணையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கு கூட பதிவில்லை. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 9 நபர்களைத் தவிர மற்ற மோசடிப் பேர்வழிகள் அனைவரும் தொடர்ந்து
பத்திரப்பதிவுத்துறையிலிருக்கிறார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட 7000 ஏக்கர் நிலங்கள் மோசடி பத்திரங்கள் மூலம் பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி IAS அறிக்கை அளித்துள்ளதில் கிட்டத்தட்ட 2000 ஏக்கர் நிலம் திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த மோசடி பத்திரப்பதிவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத கவிதா ராணி ஜூலை மாதம் 22 ஆம் தேதி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களின் பத்திரப்பதிவுகளை கண்காணிக்க கூடிய உயர் பதவியில் நியமிக்கப்படுகிறார்.
இந்த மோசடி தமிழகத்தில் நடந்துள்ளது. ஆனால் மோசடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை செயலாளர், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அவர்கள் மேலும் பல மோசடிகள் செய்ய ஊக்குவிக்கிறார் செய்யும் அனைத்து செயல்களையும் முதல்வர் ஆலோசனைப்படி செய்யும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி தான் PACL மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வு வழங்குகிறாரா? என்ற வினா எழுகிறது
தமிழகத்தில் இந்த மோசடிகள் பற்றி பேச தைரியம் உள்ள அரசியல் கட்சி ஒன்று கூட இல்லை?
இந்த மோசடி பத்திரப்பதிவில் 63 பதிவு அலுவலர்களுக்கு தொடர்பு. ஆனால் இது வரை 9 பேர் மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Addl IG சீனிவாசன் PACL நிலங்களை பத்திரப்பதிவு செய்யலாம் என்று வெளிப்படையாகவே உதவி இருக்கிறார். அவர் மீதான நடவடிக்கையில்லை. அவர் மீது FIR இதுவரை பதியப்படவில்லை. ஒருவர் கூட இது வரை கைது செய்யப்படவுமில்லை. இதெல்லாம் எப்பொழுது நடக்கும் என்று ஜோதி நிர்மலாசாமி IAS அறிக்கை அளிப்பாரா? என அமைச்சர் மூர்த்தி பதில் சொல்ல வேண்டிய நிலை
நாள் கடத்தாமல் திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமா? இல்லை இந்த மோசடிப் பேர்வழிகளை வைத்தே பத்திரப்பதிவுத்துறையில் தொடர்ந்து மோசடி செய்யுமா? எனவும் வினா எழுகிறது.
ஆயிரம் மக்களை இந்தியா முழுவதும் ஏமாற்றிய PACL நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, உச்சநீதிமன்ற நீதிபதி LODHA கமிட்டியால் விற்பதற்கு தடை செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் நிலத்தை விற்பதற்கு துணையாக செயல்பட்டு வசமாக சிக்கி இருக்கிறார் கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசன். ஆனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் செயலர் ஜோதி நிர்மலாசாமி IAS, DVAC விசாரிச்சு முடிச்சு அறிக்கை அளிக்கும் வரை ஒன்றும் செய்ய மாட்டார்களாம். அந்த உயர் பதவியில் உட்கார்ந்து சம்பளம் வாங்குவது தான் நமது வினாவின் மையம் மிகவும் இந்த துறைக்கு அமைச்சர் மூர்த்தி இருக்கிறார்.லோதா கமிட்டி செபி வழிகாட்டுதலின் படி பிஏசிஎல் ஆவணப் பதிவு செய்யும்போது நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதா என்ற கேள்விக்கு, ஒதுக்கப்பட்டுள்ளது (ஆம்) என்று பதிலளித்தவர்களுக்கான தொகையை சிபி வங்கிக் கணக்கில் செலுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது. தற்போதைக்கு இதனை திருத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை.
மக்களுக்கு சந்தோஷமான செய்தியை அளித்த செபி
அதாவது பிஏசிஎல் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சிபி ஒரு இணையதளத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. அந்த இணையதளத்தில் ஆரம்ப கட்டத்தில் மக்களுக்கு சரியான தகவல் கிடைக்காததால், நிறைய குழப்பங்கள் ஏற்பட்டது.
முதலில் ஆவணங்களை கலர் ஜெராக்ஸ் அனுப்புங்கள் என்றனர், பின்பு வெள்ளை கருப்பு போன்று அனுப்ப உத்தரவிட்டனர். இதனால் மக்கள் குழப்பமடைந்தனர். எந்த விதத்தில் அப்லோட் செய்ய வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாமல் இருந்தது.
இது போன்ற சூழலில், பதிவு செய்யும்போது ஒரு சில தவறுகள் நடக்க நேரிட்டது, அதில் முக்கியமானது நிலம் ஒதுக்கப்பட்டதா, இல்லையா என்பது. பொதுவாக பணம் செலுத்திய ஆவணத்தில் பார்க்கும்போது எந்த ஒரு வாடிக்கையாளரின் ஆவணத்திலும் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றே குறிப்பிடப் பட்டிருக்கும்.
ஆனால் உண்மை என்னவென்றால் அது நிறுவனத்தின் ஒரு வகையான உத்தரவாதம் மட்டுமே. ஆனால் உண்மையில் நிலம் ஒதுக்கி இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு அதற்கென்று தனி ஆவணம் ஒன்று பிஏசிஎல் நிறுவனம் இருந்து கொடுக்கப்படும்.
ஆனால் அந்த ஆவணம் நூற்றில் பத்து நபர்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கும். அந்த பத்து நபர்கள் மட்டுமே நில ஒதுக்கீடு என்ற இடத்தில் ஒதுக்கப்பட்டது (ஆம்) என்று கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் நிறைய நபர்கள் பிஏசிஎல் ஆவணத்தில் நில (அளவு) கொடுக்கப்பட்டதை பார்த்து, தவறுதலாக புரிந்து கொண்டு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கொடுத்துவிட்டனர். இதன் காரணமாக நிலம் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு எவ்வாறு நாம் பணம் கொடுப்பது என்பது பற்றிய விஷயங்களில் காரணமாக சிபி தற்போது அவர்களின் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வில்லை.
இதனால் சிபி தற்போது நிறைய நபர்களுக்கு வங்கிக் கணக்கில்பணம் வரவு வைக்க முடியாத நிலை இருக்கிறது. இதில் மக்கள் தவறு என்றும் சொல்ல முடியாது. நிறைய நெட் சென்டர்களிலும் இந்த தவறுகள் நடந்தது.
இதற்கெல்லாம் சரியான காரணம் தேடுவதை விட, தற்போது இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர உபாயம் தேடுவதே சரியானதாக இருக்கும். தற்போது 7,000 வரை உள்ளவர்களுக்கு திருத்துவதற்கான வாய்ப்பு சிபி வழங்குகிறது.அதுவும் அக்டோம்பர் 31 வரை என்று தெரிவித்திருக்கிறது
இருப்பினும் இந்த வாய்ப்பானது வங்கிக் கணக்கு எண், பெயர் மாற்றம் போன்ற விஷயங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் நில ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட விஷயத்தை திருத்தம் வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. ஆகையால் இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களை குழப்பமடைய தேவையில்லை.
இதுவரைக்கும் இதுபோன்ற விஷயங்களில் சிபி இடம் புகார் அளித்து மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான் செபியிடம் புகார் அளிப்பது மட்டுமே.
ஏனென்றால் இதுபோன்ற தவறுதலாக நில ஒதுக்கீடு உள்ளது என்று குறிப்பிட்டது 7000 வரை இருப்பவர்கள் மட்டும் கிடையாது, ஒட்டுமொத்த பாலிசிதாரர்கள் அனைத்து பேரிலும் கிட்டத்தட்ட 10 லிருந்து 15 சதவீதம் நபர்கள் இதுபோன்ற தவறுகளை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
அப்படி பார்க்கப்போனால் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணம் அதிகமாகும் போது, அதாவது தற்போது பத்தாயிரம் வரை கொடுக்கப்படும் இந்த பணமானது வருங்காலத்தில் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் வறை கொடுக்க நேரிட்டாலும், அப்போதும் தவறுதலாக பதிவு செய்தவர்கள் காணப்படுவர். அவர்களுக்கும் திருத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
PACL: 8 உரிமையாளர் கொண்ட நிறுவனம் மொத்த சொத்துக்களையும் வாங்க தயார்
இதில் இருக்கும் ஒரே வருத்தம் என்னவென்றால் காலதாமதம் மட்டுமே. குறுகிய காலத்தில் பணம் மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க படலாம். ஆனால் இதுபோன்ற தவறுகளால் அந்த கால அவகாசம் நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே தற்போது வரை நிலம் உள்ளது என்று தவறு இழைத்தஅவர்களுக்கான திருத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து வடமாநிலத்தில் சிபியின் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முடிவு எடுத்திருக்கிறார்.
விரைவில் சிபி இதற்கு ஒரு நல்ல உபாயம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு இணையதளத்தில் ஏதேனும் மாற்றம் இருப்பின் நிச்சயமாக மக்களுக்கு உதவியாக அமையும். உங்களின் மேலான கருத்துக்களை சிபியிடம் இடம் மற்றும் நோடல் ஆபீஸர் இடம் தெரிவியுங்கள்
7000 வரை உள்ளவர்கள் தவறை திருத்த முடியவில்லை அது ஒரு பக்கம்
கருத்துகள்