கௌண்டர் லாபி. அரசியலால் கடுப்பான டெல்லி கையறு நிலையில் ஒற்றைத் தலைத் தலைமை.
எடப்பாடி கே.பழனிசாமி நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ளவே சென்று இருந்த நிலையில். மேலும், புதிய குடியரசுத் தலைவராகத் தேர்வான திருமதி திரௌபதி முர்முவை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஜூலை மாதம் 25 ஆம் தேதி திங்கள்கிழமை திருமதி திரௌபதி முர்மு நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் நிலையில், அதில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் டெல்லி சென்ற நேரத்தில் இங்குப் பலவிதமான நெருக்கடியான சம்பவங்கள் நடந்து வருகிறது. முதலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எடப்பாடி கே.பழனிசாமியின் செயல்பாடுகளுக்கெதிராக அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஓ.ப.ரவீந்திரநாத் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரேயில்லை என நாடாளுமன்ற மக்களவை சபாநயருக்கு எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பு கடிதமெழுதிய நிலையில், கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரைச் செயல்படவிடாமல் தடுப்பதாக வி.கே.சசிகலா நடராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அடுத்ததாக தடை செய்த குட்ஹா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. அதோடு அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதமும் ஒரு காரணமாக பார்க்கப் படுகிறது.
அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் அதிர்ச்சியளிப்பதாக இருந்த நிலையில் தனது டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துவிட்டு, சென்னை திரும்பி வர உள்ளதாகத் தகவல். குடியரசுத் தலைவர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், திட்டத்தை மாற்ற நான்காவது சம்பவமாக அமைந்ததாகும் பார்க்கப்படுவது
அரசு ஒப்பந்ததாரர்களிடம் வருமானவரி சோதனையில் ரூபாய் 165 கோடி பணமும் 14 கிலோ தங்கமும் ரூபாய் 150 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியது கைபற்றப்பட்டதாகத் தகவல் வரவே அவரை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது அதுகுறித்த முழுமையான விபரம் வருமாறு:- மதுரை பால்ராஜ் ஜெயக்குமாருக்குச் சொந்தமான ஜெயபாரத் மற்றும் கிளாட்வே நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறைச் சோதனையில் ரூபாய்.165 கோடி ரொக்கமாகவும், 14 கிலோ தங்கம் மற்றும் ரூபாய் 150 கோடி மதிப்பிலான சில சொத்துக்களுக்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன இது முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மற்றும் முன்னால் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு நெருக்கமான கான்டிராக்டர்களின் நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையாகும் அதில் தான் ரூபாய் 165 கோடி பணமும், 14 கிலோ தங்கமும், ரூபாய் 235 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்து அவர்களளை மேலும் அதிர்ச்சியடையச் செய்த நிலையில்
மேலும் ஐந்தாவதாக:
மதுரைக் கட்டுமான ஒப்பந்ததாரர் முருகவேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் தமிழ் நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் மகன் மிதுனுக்கு நெருக்கமானவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஒப்பந்தப்பணிகளை எடுத்துச் செய்தவர் மீதான வருவாய் வரி ஏய்ப்புப் புகாரில், ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் இவருக்குச் சொந்தமான மதுரை கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறிடங்களிலும், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா கோசுக்குறிச்சியிலுள்ள அலுவலகம், ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சின்னகரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி அண்ணாநகர் பகுதிகளிலும் சோதனைகள் நடந்தது வந்தது.
இதேபோலவே, அதிமுக முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமானவர் மதுரை அவனியாபுரத்தை பால்சாமியின் மகன்கள் அழகர், முருகன், ஜெயக்குமார், சரவணன் மற்றும் பங்குதாரர் செந்தில்குமார். இவர்கள் ஜெயபாரத் என்ற கட்டுமான நிறுவனத்தையும், அதன் துணை நிறுவனங்களாக கிளாட்வே சிட்டி, அன்னை பாரத், கிளாட்வே கிரீன்சிட்டி ஆகிய கட்டுமான நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதாவது நிலங்கள் வாங்கி விற்பனைத் தொழிலும் செய்து வரும் இவர்களது அலுவலகங்கள், மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. மதுரையில் கோச்சடை, விரகனூர், திருப்புவனம் மணலூர் இங்கெல்லாம் விற்பனைக்கென வீடுகள் கட்டியும், மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் வீடுகள் கட்ட பல ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கிக் குவித்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனைக்கு பிறகு, நேற்றைய தினம் பறிமுதலான தொகை, நகைகள், ஆவணங்கள் கணக்கிடப்பட்டன. இதில், ரூபாய் 165 கோடி ரொக்கமும், 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூபாய் 235 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிய வந்துள்ளதால். மேலும்
வருமானவரித்துறையினர் சோதனையில் முருகன் என்பவரது வீட்டில் ரூபாய் 75 கோடி ரொக்கமும், மூன்று கிலோ 200 கிராம் தங்கமும், ரூபாய் 93 கோடி மதிப்பிலான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதோடு செந்தில்குமார் என்பவர் வீட்டில் இரண்டு கிலோ 700 கிராம் தங்கமும், ரூபாய் 1 கோடியே 96 லட்சம் மதிப்பில் ஆவணங்களும், மேலும் சரவணகுமார் என்பவர் வீட்டில் மூன்றரை கிலோ தங்கமும், பணம், வைரம் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன். அழகர் என்பவர் வீட்டில் ரூபாய் 90 கோடி ரொக்கம், ரூபாய் 130 கோடிக்கு சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜெயகுமாரின் கோச்சடை வீட்டில் நடைபெற்ற சோதனையில் நான்கு கிலோ தங்கமும், பணம், மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீட்டில் 14 கிலோ தங்கமும், ரூபாய் 165 கோடி ரொக்கமும் மற்றும் ரூபாய் 235 கோடிக்கான ஆவணங்களையும் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. தொடர் விசாரணைக்கு பிறகே முழுமையான கணக்கீடுகள் மற்றும் பினாமிகள் குறித்த விபரங்கள் தெரிய வருமென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு பக்கம் நடக்க மற்றொரு புறம் .குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி வி ரமணா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர தமிழ்நாடு அரசு சிபிஐ கேட்டிருந்த அனுமதியை. வழங்கியது. கடந்த காலங்களில் அதிரடி காட்டிய சி.பி.ஐ குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்ட ஆறு பேரைகீ கைது செய்ததைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தது. இதற்கிடையே, ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 27 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள நிலையில் முறைகேடு செய்த ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த பொறுப்பிலுள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு இஆப வெளியிட்டுள்ள அரசாணை விபரம்: அரசு ஊழியர்கள் முறைகேட்டிலீடுபட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, ஏற்கனவே அரசு பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால், பல நிகழ்வுகளில், அரசு ஊழியர்கள் மீதான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
ஆனால், அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதே முறைகேடு தொடர்பாக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கத் தடையில்லை என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, முறைகேடில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளதன்படி அரசு ஊழியர் செய்யும் முறைகேடு தொடர்பான குற்ற வழக்கும், துறை ரீதியான நடவடிக்கையும், ஒரே நேரத்தில் நடத்தப்படலாம். குற்ற வழக்கில் கூறப்படும் தீர்ப்பு, எந்த வகையிலும் துறை ரீதியான முடிவைப் பாதிக்காது. எனவே, தீர்ப்புக்காக காத்திருக்கத் தேவையில்லை.ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்போது, அனைத்து ஆவணங்களையும் ஊழல் தடுப்பு துறையினர் எடுத்துச் செல்வர். துறை ரீதியான நடவடிக்கைக்கு, அந்த அசல் ஆவணங்களின் உண்மை நகலை வாங்கி, நடவடிக்கையைத் தொடரலாம்.
ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆஜராகா விட்டாலோ, எழுத்துப்பூர்வமான அறிக்கை தராவிட்டாலோ, அரசு விதிகளுக்கு கீழ்படிய மறுத்தாலோ, 'எக்ஸ்பார்ட்டி' உத்தரவை, விசாரணை அதிகாரி பிறப்பிக்கலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஊழியரை 'டிஸ்மிஸ்' செய்வது போன்ற பெரிய முடிவை, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கலாம். குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அந்த ஊழியரை விசாரிக்க முடியாது என்று, எடுத்து கொள்ளக் கூடாது. நீதிமன்றத் தீர்ப்பு, துறை விசாரணை முடிவைப் பாதிக்காது.
முறைகேடு செய்த ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தப் பொறுப்பிலுள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்ற எச்சரிக்கை உத்தரவாகியுள்ளது இது . எடப்பாடி கே.பழனிச்சாமி தனது ஆட்சிக் காலத்தில் ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை காரணம் ஒரு ஊழல் கூட்டமே அவரால் கொழுத்து வளர்ந்த நிலையில் உப்புத் தின்றால் தண்ணீர் குடிப்பது போல தப்புச் செய்தவர்கள் தண்டனை பெறும் காலம் நெருங்கி வருகிறது.குட்ஹா வழக்கில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை செங்குன்றம் குட்ஹா விற்பனை செய்யும் கிடங்கில் 2018 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் நடத்தினய. இந்த சோதனையில் தடை செய்யப்பட்டுள்ள குட்ஹாவை சேர்த்து வைத்ததோடு இல்லாமல் பல கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்தது. இந்தச் சோதனையின்போது ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில், முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல்துறை டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் ஊழல் பணம் கொடுக்கப்பட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து விசாரிக்கும்படி வருமான வரித்துறை சிபிஐ அதிகாரிகளுக்குக் கடிதமெழுதியது.
அதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள், மற்றும் அலுவகலங்களில் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சராக இருந்த டாக்டர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட போதும் அரசியல் காரணங்களால் அவர் இதுவரை காப்பாற்றப்பட்டதாகவும் பேசப்பட்ட நிலையில். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் ஜந்து பேர் மீது குற்றப்பத்திரிகையை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, மேலும் தொடர் விசாரணை நடத்தியதில் இதில் மேலும் பலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா(எ) வெங்கட்ரமணா, முன்னாள் காவல்துறை டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ், தற்போது மதுரையில் வணிக வரித்துறை இணை ஆணையராக உள்ள குறிஞ்சி செல்வம், வேலூர் வணிக வரித்துறை துணை வரி விதிப்பாளர் கணேசன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லட்சுமி நாராயணன், அதே துறையில் பணியாற்றும் முருகன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி ஆணையர் மன்னர் மன்னன், தற்போது காஞ்சிபுரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் சம்பத், சுகாதார கமிட்டியின் தலைவர் பழனி உள்ளிட்ட 11 நபர்கள் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில்
இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் சட்டக் கருத்துரை கேட்கப்பட்டது. அவர் அளித்த கருத்துரைகளின் அடிப்படையில், உள்துறைச் செயலாளர் பனீந்திரரெட்டி, இஆப தலைமைச் செயலாளர் இறையன்பு, இஆப தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனை படி உத்தரவு வழங்கப்பட்டது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்த உத்தரவில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் அவர்கள் இருவருக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டது. மற்ற 9 பேருக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மத்திய அரசின் அனுமதி வந்ததும், 11 பேர் மீதும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முன்னால் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கைதும் நடக்கலாம்.ஓ.பன்னீர் செல்வம் அணியிலிருந்து அதிமுகவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கே.பழனிசாமி பக்கம் சென்ற மாவட்டச் செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை இன்று அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த அதிமுகவில் மாநகர மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஆர்பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராஜன் செல்லப்பா ஆகியோர் கூண்டோடு கே.பழனிச்சாமி பக்கம் சென்றனர்.பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 90 சதவீதம் பேரும் அவர்களுடன் கே.பழனிசாமி அணிக்கு சென்றனர். ஆனால், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மிக சிலரே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மதுரையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் திமுகவுக்கு சென்றார். அதபோல், முன்னாள் சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவிற்கு சென்றார். முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், கே.பழனிசாமி அணிக்கு சென்றார்.
கருத்துகள்