மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட இருவர் இராஜினாமா.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான முக்தர் அப்பாஸ் நக்வி இராஜினாமா.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக முக்தர் அப்பாஸ் நக்வி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் நாளையுடன் முடிவடையும் நிலையில் கடந்த ஆறு மாதம் பல மாநிலங்களில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் முக்தர் அப்பாஸ் நக்வி எந்த மாநிலத்திலிருந்தும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாத காரணத்தால் அப்போதே அவர் துணை ஜானதிபதி பதவிக்கு போட்டியிடலாம் எனற சூழலில் மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங்கும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரான ஆர்.சி.பி.சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிற நிலையில் அவர் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உட்கட்சி பிரச்சினை காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் ஆர்.சி.பி.சிங்கிற்கு மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு வழங்கவில்லை எனத் தெரிகிறது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, முகமது அப்பாஸ் நக்வி பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தார். இதனிடையே சில நிகழ்வுகளின் படி ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள துணை குடியரசு தலைவர் தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களின் ஆளுநர் அல்லது லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கு அவரைப் பரிந்துரைக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி இன்று ராஜினாமா செய்துள்ளார்.
கருத்துகள்