பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று
முப்பத்தாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ திறம்பட செயல்படுத்துவதற்கும், தலைமைச் செயலாளர்/நிர்வாகி தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய அளவிலான பணிக்குழுவும் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநில/யூனியன் பிரதேச அரசுகள், தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் ஒரு விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி, அதனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைக்காக, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு கூடுதலான உதவிகளை வழங்குகிறது. தூய்மை இந்தியா திட்டம் 2.0(நகர்ப்புறம்) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிற பொருட்களை தயாரிப்பதற்கும், மற்ற தொழில்களில் ஈடுபடுவதற்கும் இந்த அமைச்சகம் உதவி செய்கிறது.
இந்த தகவலை சுற்றுச்சுழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறைக்கான இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்