கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு
ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் 24 ஆம் தேதி முற்பகல் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தத் தேர்வினை கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டங்களை தேர்வு மையங்களாகக் கொண்டு மொத்தம் 42,600 தேர்வு விண்ணப்பதாரர்கள் 143 தேர்வு மையங்களில் எழுத உள்ள நிலையில். கள்ளக்குறிச்சி மாவட்டம் 3401-கள்ளக்குறிச்சி தேர்வு மையத்திற்குட்பட்ட தேர்வுக் கூடம் எண்:- 043, 044, 045, 046 - கனியாமூர், சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத 1200 தேர்வர்களுக்கு தேர்வாணையத்தால் பட்டியல் இறுதி செய்யப்பட்டு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில் சக்தி இண்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீ மதியின் மர்மமாக இறந்ததையடுத்து ஏற்பட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்சனையின் காரணமாக தேர்வு நடத்துவதற்கான சூழ்நிலையில் இல்லாததால்,
மேற்படி 1200 தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு மையம் மாற்றப்படுகிறது. மாற்றிடமாக கள்ளக்குறிச்சி வட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 900 தேர்வர்களும் மற்றும் ஏ.கே.டி. நினைவு வித்யா சாகத் சி.பி.எஸ்.இ பள்ளியில் 300 தேர்வர்கள் தேர்வு எழுத தேர்வறைகள் ஒதுக்கீடு செய்து புதிய ஹால்டிக்கெட் தேர்வாணையத்தால் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டுமென குரூப் 4 தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
கருத்துகள்