மாணவி ஸ்ரீ மதியின் பூத உடல் மண்ணில் பு(வி)தைக்கப்பட்டது அந்தக் கொலைகாரனை என் பொண்ணு தண்டிப்பா.." இறுதி ஊர்வலத்தில் கதறிய தந்தை..!
கள்ளக்குறிச்சி சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மாணவி ஸ்ரீ மதி மர்மமாக மரணமடைந்த நிலையில்
உடலை ஒப்படைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை மாணவியின் பெற்றோர் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா?.. இல்லையா?. என நீதிபதியே கேள்வி எழுப்பினார். சந்தேக மரணம் எனக் கருதப்படும் மாணவி ஸ்ரீமதி உடற்கூராய்வை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் சீராய்வுசெய்ய உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு இந்த . வழக்கை விசாரித்த நீதிபதி,"உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருந்த நிலையில்,
ஏற்கெனவே தான் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலினை செய்யப் போவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு மதியம் வந்தபோது தான் உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த, தடயவியல் நிபுணர் சாந்தகுமார் தரப்பில் மர்மமாக மரணமான மாணவியின் மறு உடற்கூறாய்வு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
"இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வுகளுமே காணொளிக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதெனவும். இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில், புதிதாக எதுவும் கண்டுபிடக்கப்படவில்லை. ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதனை சரிபார்த்துக் கொள்ளலாமென்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, மனுதாரருக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது மாணவியின் தந்தை தரப்பில், "உடற்கூறாய்வறிக்கை திரிக்கப்பட்டுள்ள"தென்று குற்றம்சாட்டியதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, " மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று மருத்துவர்களைக் கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் காணொளிக் காட்சிகளின் பதிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மாணவியின் உடலை இன்று காலையில் பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும். உடலைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், சட்டப்படி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாகவே அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், மாணவியின் உடல் 13 ஆம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த. நிலையில்,
மாணவியின் உடல் இரண்டு முறை பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துக்குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாணவியின் உடல் காவல்துறை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது, பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதனிடையே மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முக்குலத்தோர் சமூகத்தின் சார்பாக அதன் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அஞ்சலி செலுத்தினர் மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதையடுத்து மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது. சொந்த ஊரில் உள்ள மக்கள் அங்கு குவிந்திருந்த நிலையில் பலர் அஞ்சலி செலுத்தி அழுத கண்ணீர் காட்சிகள் அணைவருக்கும் சோகத்தை வரவழைத்தது அங்குள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக ஏற்பாடுகள் இருந்த நிலையில். அதை மாற்றி, தற்போது மாணவியின் உடலை இடுகாட்டில் புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடக்கிறது. அதனை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் மாணவியின் இல்லத்தில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆம் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.... ஆம் நீதி கேட்டு அது கிடைக்கும் வரை ஸ்ரீ மதியின் பூத உடல் மண்ணில் பு(வி)தைக்கப்பட்டது. 'பப்ளிக் ஜஸ்டிஸ்' இதழ் சார்பில் இறுதியாக கண்ணீர் அஞ்சலி.
உன் மரணத்தில் விளையாடிய எல்லா நடிகர்களுக்கும் இது சத்திய சோதனை, தர்ம நெரி சார்ந்த பெரிய இழப்புண்டு மகளே.
கொடும் கண்ணீரில்.உன் நீதி வெல்லும்.! என்று பலரும் நம்பும் நிலையில் ஸ்ரீ மதியின் தந்தை தாய் இறுதியில் கூறிய அழியாத வார்த்தைகள் ."அந்தக் கொலைகாரனை என் பொண்ணு தண்டிப்பா.." இறுதி ஊர்வலத்தில் கதறிய தந்தை..! அங்கு வராத பலரையும் கண்ணீர் மூலம் கதறவைத்தார்..
கருத்துகள்