அஇஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் சென்ற கார் கண்ணாடியில் சுங்கசாவடி ஸ்கேன் ஸ்டிக் தட்டியதால் சாலையில் போராட்டம்
பாஸ்ட்டிராக் ஸ்கேன் ஆகாமல் அஇஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் சென்ற கார் கண்ணாடியில் சுங்கசாவடி ஸ்கேன் ஸ்டிக் தட்டியுள்ளது..
. இதை பார்த்ததும் சசிகலா நடராஜனுக்கு கோபம் வந்தது. இயல்பானதே. அதனால், தன்னுடைய காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்தியுள்ளார். உடனே அவரது ஆதரவாளர்களும் சுங்கச்சாவடியிலுள்ள கட்டண நுழைவாயில்களில் ஆங்காங்கே கார்களை அடுத்தடுத்து நிறுத்தி உள்ளனர்.கோபம் விலகாத சசிகலா நடராஜன், 'ஏற்கனவே, எனக்கு இதற்கு முன்பு இப்படித்தான் இரண்டு முறை நடந்துள்ளது.. இந்த செக்போஸ்ட்டில் இப்படி நடத்துவது மூன்றாவது முறை.. பழிவாங்கும் நோக்கில் இப்படியெல்லாம் நடத்துகிறீர்களா' என்று ஆவேசத்துடன் சசிகலா நடராஜன் கேட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து, சசிகலா நடராஜன் ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்... ஆனால், மேனேஜர் வரவில்லை.. அதனால் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து, மேனேஜர் இப்போதே வரவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்று சொல்லி நடுராத்திரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் கிடைத்ததும், ரோந்துப் பணியில் இருந்த திருவெறும்பூர் காவல்துறை விரைந்து வந்து, சசிகலா நடராஜன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தையில் கொஞ்சம் கூட உடன்படவில்லை.. மேனேஜர் வந்தாகணும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளனர்.. அதற்குப் பிறகு, சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டியை சம்பவ இடத்திற்கு காவல்துறை வரவழைத்துள்ளனர்.. பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுத்தி உள்ளனர்.. அப்போது அவர் நடந்த சம்பவத்திற்கு நேரில்'மன்னிப்புக்' கேட்டதுடன் மட்டுமல்லாமல், இந்தப் பிரச்சனை குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் தந்தால், நடவடிக்கை எடுக்கிறோமென்று காவல்துறை தரப்பில் சசிகலா நடராஜன் தரப்பினரிடம் சொல்லப்பட்டுள்ளது.. அதற்கு சசிகலா நடராஜன் தரப்பினரும், புகார் கொடுப்பதாக சொல்லி உள்ளனர்.. இதற்கு பிறகுதான் மறியல் கைவிடப்பட்டு, சசிகலா நடராஜன் ஆதரவாளர்கள் கிளம்பிச் சென்றுள்ளனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் திருச்சிராப்பள்ளியில் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுங்கச்சாவடி தரப்பினர் கூறும் போது, 'சசிகலா நடராஜன் விஐபி செல்லும் வழியில் வராமல் நார்மலாக செல்லும், பொது வழியில் வந்தார். அதனால்தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டது' என்றார்கள். இதை சசிகலா நடராஜன் ஆதரவாளர்களும் ஒப்புக் கொண்டனர்.. எப்போதுமே சசிகலா நடராஜன் விஐபி வழியை பயன்படுத்த மாட்டாராம். பொது வழியில் தான் செல்வாராம்.. மூன்றாவது தடவை சசிகலா நடராஜனுக்கு இப்படி நடந்தது என்பதால் தான், விவகாரம் முற்றி விட்டது என்றும், இது தொடர்பாக முறைப்படி புகார் கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கருத்துகள்