காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேட்டில் கர்நாடக ஏ.டி.ஜி.பி அம்ரித்பால் கைது.
காவல்துறை உதவி ஆய்வாளர். பணியிட தேர்வு முறைகேடு வழக்கு
கர்நாடக மாநிலத்தில் 545 சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வந்தது. குறித்து சி.ஐ.டி. காவல்துறை விசாரித்த வழக்கில் கலபுரகி பாரதிய ஜனதா கட்சி பெண் பிரமுகரான திவ்யா, அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பாட்டீல், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
தற்போது ஏ.டி.ஜி,பி அம்ரித் பாலை சி.ஐ.டி. காவல்துறை கைது செய்ததையடுத்து ஏடிஜிபி-யிடம் சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநில காவல்துறை சரித்திரத்தில், பணியிலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது இது முதல் முறை என உயரதிகாரிகள் கருத்தாகும். உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேட்டில், இன்னும் அடுத்தடுத்த திருப்பமாக மேலும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படலாமென எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வழக்கில், உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் அரசும் உறுதியாக இருப்பதாக தகவல் வந்துள்ளதனால், தவறிழைத்த அதிகாரிகள் கடும் அச்சத்துக்கும் ஆளாகியுள்ளனர். மேலும் தவறான வழியில் பதவி பெற்ற நபர்கள் மீதும் நடவடிக்கை பாயலாம் என்று நிலை தான் உள்ளது.
கருத்துகள்