சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:
புலிகள், பனிச்சிறுத்தை போன்ற வனவிலங்குகளுக்கு 1972-ம் ஆண்டு சட்டத்தின்படி, அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படுகிறது
வனவிலங்குகளுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்க தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன
ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விடங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.
சூழல் மேம்பாட்டு செயல்பாடுகள் மூலம் வனவிலங்குகள் பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்கள் ஈடுபடுகின்றன.
வனவிலங்குகள் மற்றும் அவற்றின் பொருட்கள் வேட்டையாடப்படுவது சட்டவிரோதமாக விற்பனை செய்வது ஆகியவை குறித்து தகவல்கள் திரட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் வனவிலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு ஒருங்கிணைந்து செயல்படுகிறது
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்தார்.
கருத்துகள்