முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவில் நடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் செல்லாது உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பில் ஆதரவாக வந்திருப்பதையடுத்து முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா


நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்

ஜூலை மாதம் 11-ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாதென்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23-ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தீர்ப்பளித்துள்ள


நிலையில்.பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும்  உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை  தேர்வு செய்தது செல்லாதென்ற நிலை ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.முன்பாகத் திரண்டிருந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பாகத் திரண்ட
அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்  தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்திருப்பதால், ஜெ.நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார் .
இதனால் அங்கு அவரது ஆதரவாளர்களான அதிமுக தொண்டர்களும், ஜெ.நினைவிடத்தில் குவிந்தனர்,   மேலும் தீர்ப்பு விவரம்:- உள்ளது உள்ளபடி          Madras High court THE HONOURABLE Dr. JUSTICE G.JAYACHANDRAN.  Original Application Nos.368,370 and 379 of 2022 are disposed of, with the following directions:-(i)There shall be an order of status quo ante.  as on 23.06.2022.                                          (ii)There shall be no Executive Council meeting or General Council meeting without joint consent of the Co-ordinator Thiru.O.Panneerselvam and Joint Co-ordinator Thiru.EdappadiK.Palaniswami.

(iii)There shall be no impediment for the

Co-ordinator and the Joint Co-ordinator on their own to convene the General Council Meeting jointly to decide the affairs of the party including amendment of the party constitution restoring Single leadership.
(iv)If a proper representation from not less than 1/5 th members of the total members of the General Council is received, the Co-ordinator and the Joint Co-ordinator shall not refuse to convene the General Council meeting.

(v)The General Council meeting, on such requisition shall be convened within 30 days from the date of receipt of the requisition and it shall be held after 15 days advance Notice given in writing.(vi)In case, the Co-ordinator and the Joint Co-ordinator are of the opinion that, for any reason further direction is required for conducting the General Council meeting or need assistance of Commissioner for conducting the meeting, it is open for them to approach this Court and seek necessary relief.

81. With the above directions, these Original Applications are disposed of. There shall be no order as to costs.    என உத்தரவு                       அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் தனித் தனியாக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களைக் கூட்டக் கூடாது,  ஜூன் மாதம் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும்,


இருவரும் இணைந்து தான் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். முப்பது நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது,-
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு  முன்னால் முதலமைச்சர் காலஞ்சென்ற ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா நிலையம் வீட்டை அரசுடைமை ஆக்குவதாக இதே நாளில்தான் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியிலிருந்த எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.  ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு போயஸ்கார்டன் பக்கம் யாரும் போய்விடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அப்படி எடப்பாடி கே.பழனிச்சாமி செய்ததாக அப்போது பேசப்பட்டது.

அதற்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை என்று பலர் விளக்கமளித்தனர். பொதுக் குழுவில்  எடப்பாடி கே பழனிசாமி, இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வானதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில், போயஸ் கார்டனை அரசுடைமை ஆக்கிய அதே நாளில்தான், தீர்ப்பும் தற்போது வந்துள்ளது!  அப்புறம்... நாளை பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன் பிறந்தநாள். காலம் சில விசித்திரமான சங்கதிகளை காலம்தோறும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. 17.08.2022 சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இனிமேல் அதிமுக தொண்டர்கள் ,மாவட்டச் செயலாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் ஓ.மன்னீர் செல்வம் பின்னர் செல்வார்களா ?


அல்லது எடப்பாடி கே.பழனிச்சாமி அவ்வளவு எளிதாக முன்னேற ஆட்சிஅதிகார வர்க்கம் இடம் தருமா விடாது என்பதே நிலை !

ஒட்டுமொத்த அதிமுகவினரும்  எடப்பாடி பக்கம் என பல பக்க வாத்தியங்கள் முழங்க உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு மாறுமா என்பதை மேல்முறையீட்டு மனு மற்றும் சட்ட நடவடிக்கை முடிவு செய்யும்.   அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தீர்ப்பு வந்த உடன் இன்று மதியம்  தலைநகர் சென்னை- விமான நிலையத்தில் வந்த நிலையில் அங்கு அவரை வடசென்னை வடக்கு(மேற்கு) மாவட்டச் செயலாளர்  கொளத்தூர் D.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பகுதி,கிளைச் செயலாளர்கள்,நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அமமுக பொதுக்குழுக் கூட்டம் சட்ட விதிகளின் படி நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட பொதுச்செயலாளர், தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளுக்கான பதவிக்காலம் ஏப்ரல் 2023-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. துணைத் தலைவராக உள்ள அன்பழகனை தலைவர் பதவிக்குக் கொண்டு வருவது குறித்தும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தருவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது.


சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது" என்றனர் அமமுகவினர். பாஜக-வுடன் கூட்டணி வைப்பது குறித்து டி.டி.வி.தினகரன் தான் அறிவிப்பார். முழுக்க முழுக்க கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தினகரன் ஈடுபட உள்ளார். அதற்கான திட்டமிடலே முழுவதுமாக நடந்து வருகிறது. சசிகலா நடராஜன் படத்தை பொதுக்குழுவில் புறக்கணித்தது குறித்து பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள், அதிமுக-வை கைப்பற்ற சசிகலா நடராஜன் சட்டரீதியாக முயற்சி எடுத்து வருவதாலேயே அவரின் படங்கள் பொதுக்குழுவில் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன