உள்துறை அமைச்சகம் 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரையை செப்டம்பர் 15, 2022 வரை அளிக்கலாம்

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது. 1954ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதையடுத்து குடிமை மக்கள் அனைவரும் தங்களுக்கான பரிந்துரைகளையும், மற்றவர்களுக்கான பரிந்துரைகளையும் அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள்