வருமான வரி சோதனையில் ரூ.200 கோடி, மறைமுக வருவாய் ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத ரூ. 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
தமிழகத்தில்
திரைப்பட பைனான்சியர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கில் வராத பணக் கடன்கள் தொடர்பான உறுதிப்பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் வரி ஏய்ப்புச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன, ஏனெனில் வழக்கமான கணக்குப் புத்தகங்களில் காட்டப்படும் தொகையை விட திரைப்படங்கள் வெளியானதிலிருந்து பெறப்பட்ட உண்மையான தொகைகள் அதிகம். அவர்களால் உருவாக்கப்படும் கணக்கில் காட்டப்படாத வருமானம், வெளிப்படுத்தப்படாத முதலீடுகள் மற்றும் பல்வேறு வெளிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதேபோல், திரைப்பட விநியோகஸ்தர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், திரையரங்குகளில் இருந்து கணக்கில் வராத பணம் வசூலிக்கப்பட்டதை காட்டுகின்றன. ஆதாரங்களின்படி, விநியோகஸ்தர்கள் தங்களுக்குள் சிண்டிகேட்களை உருவாக்கி, தியேட்டர் வசூலை திட்டமிட்டு மறைத்துவிடுவதால் உண்மையான வருமானம் மறைக்ககப்பட்டுள்ளது.
இதுவரை, தேடுதல் நடவடிக்கையின் விளைவாக கணக்கில் வெளிப்படுத்தப்படாத வருமானம் ரூ. 200 கோடி, வெளியிடப்படாத ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத ரூ. 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. என் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு பொதுவான பார்வை.அன்புச் செழியன் உள்ளிட்ட திரைத்துறையினர் மீதான வருமான வரித்துறை ரெய்டுகள்
இந்தியாவிலேயே இல்லாத வகையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் சம்பந்தப்பட்ட சுமார் 120 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நிகழ்த்தினர். கடந்த ஆண்டுகளில்
ஆனால், தற்போது சசிகலா நடராஜனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கை வருமான வரித்துறை வாபஸ் வாங்கியது. சசிகலா நடராஜனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை சென்னை உயர் நீதிமன்றமும், ஏற்றுக் கொண்டு அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பைனான்சியர்களாக இருந்த மார்வாடிகளான முகன் சந்த் போத்ரா, மோகன்குமார், பாபிகா ஜெயின் போன்றவர்களிடம் தயாரிப்பாளர்கள் பட்ட அவஸ்த்தைகளை கேட்டால் வால்யூம், வால்யூம்களாகச் சொல்கிறார்கள்! அன்புச் செழியனின் வருகை மார்வாடிகளை கிட்டதட்ட அல்லது முற்றிலுமாகவே தமிழ் சினிமா பைனான்ஸில் இருந்து அப்புறப்படுத்தி விட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதில் அரசியல் நெடி வருகிறது வருமான வரி ரெய்டுகளும், உள் நோக்கங்கள் உண்டா இல்லையா என்பதை அரசியல் பொருளாதாரம் உணர்ந்தவர்கள் மட்டுமே அறியமுடியும் என்பது தான் இங்கு பொது நீதி
கருத்துகள்