2022 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற பளுதூக்கும் வீரர் பி. குருராஜாவுக்கு பிரதமர் வாழ்த்து
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றதற்காக பளுதூக்கும் வீரர் பி. குருராஜாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"பி. குருராஜாவின் சாதனையால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். அவர் மிகுந்த ஊக்கத்தையும், மன உறுதியையும் வெளிப்படுத்தினார். அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல மைல்கல் சாதனைகள் சிறக்க வாழ்த்துகிறேன்."
கருத்துகள்