பர்மிங்காம் 2022 காமன்வெல்த்தில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யாவுக்குப் பிரதமர் வாழ்த்து
பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 68 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022-ல் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் மல்யுத்த வீரர்கள் மிகச்சிறந்தவர்கள், இது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தெளிவாக பிரதிபலிக்கிறது. திவ்யா @DivyaWrestler வெண்கலம் வென்றதற்காகப் பெருமைப்படுகிறேன். இந்த சாதனை வரும் தலைமுறைகளால் போற்றப்படும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்."
கருத்துகள்