கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கச்சநத்தத்தில் மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேரும் குற்றவாளிகளென அறிவித்த வன்கொடுமை தடுப்புச் சட்ட தனி நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.முத்துக்குமரன், தண்டனை விவரம் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்றார்.
கச்சநத்தம் கருப்பர் கோவில் முதல் மரியாதை வாங்குவதில் இரு தரப்பினருக்குள் பிரச்னை ஏற்பட அந்த முன்விரோதத்தில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு ஒரு தரப்பினர், கச்சநத்தத்திலுள்ள மற்றொரு தரப்பினரின் வீடுகளில் புகுத்து அரிவாளால் தாக்கியதில் கச்சநத்தம் சண்முகநாதன் (வயது 31), ஆறுமுகம் (வயது 65), சந்திரசேகர் (வயது 34), பலியாகினர். சுகுமாறன் (வயது 23), மலைச்சாமி (வயது 50), தனசேகரன் (வயது 32), மகேஸ்வரன் (வயது 18), தெய்வேந்திரன் (வயது 45), ஆகியோர் காயமுற்ற நிலையில் அதில் ஒருவர் தனசேகரன் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்., 16 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்தக் கொலை வழக்கில் ஆவரங்காடு கந்தசாமி (வயது 37), கச்சநத்தம் முத்தையா (வயது 60), உள்ளிட்ட 33 நபர்கள் மீது பழையனுார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதில் மூன்று சிறுவர்கள், ஒருவர் இறந்த நிலையில். மற்றொருவர் தலைமறைவானார் மீதம் 27 நபர்கள் நேற்று மதுரை, மற்றும் திருச்சிராப்பள்ளி சிறையிலிருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். காவல்துறை கண்காணிப்பாளர், செந்தில்குமார் தலைமையில் 3 துணை கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 250 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் வழக்கம் போல மாலை 5:00 மணிக்கு வழக்கில் கைதானவர்களின் குற்ற விபரங்களை நீதிபதி வாசித்தார். அதைத் தொடர்ந்து இரவு 7:35 மணி வரை வாசித்ததும் 27 பேர்களும் குற்றவாளிகளென அறிவித்து, தண்டனை விவரத்தை ஆகஸ்ட் மாதம்., 3 ஆம் தேதியில் தெரிவிப்பதாக நீதிபதி ஜி.முத்துக்குமரன் தீர்ப்பு வாசித்தல் முடிந்து கூறினார். நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு போடப்பட்ட நிலையில். நேற்றிரவு 8:00 மணிக்கு அரசினர் மகளிர் கலைக் கல்லுாரி அருகில் கூடிய ஆவரங்காடு, மற்றும் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கைதானவர்களைப் பார்க்க அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகும் படி செய்தனர்.
கருத்துகள்