தனியார் வங்கிக் கொள்ளையில் காவல்துறை ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் 3.5 கிலோ தங்கம் சிக்கியது
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் காவல் ஆய்வாளர் அமல்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறையில் மாத்திரம் அல்ல பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டனிலுள்ள தனியார் வங்கிக் கிளையில் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களைக் கட்டிப்போட்டும் 32 கிலோ தங்க நகைகளை திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காணொளிப் பதிவுகளையும் ஆய்வுசெய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன
தனிப்படைக் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்( வயது 30), பாலாஜி (வயது 28) ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கொள்ளை சம்பவத்தில் மாஸ்டர் மைன்ட்டாகச் செயல்பட்ட சென்னை பாடியைச் சேர்ந்த அதே வங்கியின் கஸ்டமர் கேர் மேலாளராக பணியாற்றிவந்த முருகன், திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரையும் கைது செய்தனர். அதையடுத்து கொள்ளையடித்த தங்க நகைகளை கோயமுத்தூரில் விற்கச் சென்ற முருகனின் கூட்டாளியான சூர்யாவையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் 31 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடி வந்த நிலையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் அமல்ராஜிக்கு தொடர்பிருக்கும் ரகசியத் தகவல் தனிப்படை காவல்துறையினருக்குக் கிடைத்தது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு கொடுக்கப்பட்டதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின் படி அச்சரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜின் வீட்டுக்கு தனிப்படைப் காவல்துறையினர் சென்றனர். அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்க நகைகளைக் பறிமுதல் செய்தனர். தங்க நகைகள் குறித்து ஆய்வாளர் அமல்ராஜிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கட்டிபோடப்பட்ட வங்கி ஊழியர்கள்.. கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகள்!
ஆய்வாளர் அமல்ராஜ் குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தமிழக காவல் துறையில் கடந்த 1999-ஆம் ஆண்டு சாரபு ஆய்வாளராக அமல்ராஜ் பணிக்குச் சேர்ந்துள்ளார். இவர், மேல்மருவத்தூர், கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர் ஆகிய இடங்களில் பணியாற்ற்யுள்ளார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை அச்சரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார்" என்றார்.
வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படை காவல்துறையினரிடமிருந்து தகவல். ``ஆய்வாளர் அமல்ராஜிக்கும் கொள்ளை வழக்கில் கைதானவர்களுக்கும் எந்த வகையில் தொடர்பு என்று விசாரணை நடத்தப்பட்டதில், இந்த வழக்கில் கைதான சந்தோஷ் என்பவரின் உறவினர் தான் ஆய்வாளர் அமல்ராஜ் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் தான் அவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.தொடர்பாக அமல்ராஜிடம் விசாரித்த போது அவர் அமைதியாகவே இருக்கிறார். அதனால்தான் தகவல்களை சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.இந்த நிலையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளை போன வழக்கில் திருப்பமாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் அமல்ராஜிக்குஅ தொடர்பிருக்கும் ரகசியத் தகவல் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்தது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று மேலிடத்திலிருந்து க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின்படி அச்சரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் வீட்டுகு தனிப்படை காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இந்தக் கொள்ளை சம்பவத்தில் மாஸ்டர் மைன்ட்டாக செயல்பட்ட சென்னை பாடியைச் சேர்ந்த அதே வங்கியில் கஸ்டமர் கேர் மேலாளராக இருந்த முருகன், திருமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரையும் காவல்துறை கைது செய்தனர். அதையடுத்து கொள்ளையடித்த தங்க நகைகளை கோயமுந்தூரில் விற்பனை செய்யச் சென்ற முருகனின் கூட்டாளியான சூர்யாவையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 31 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் இன்னும் சிலரை தேடி வந்தனர்.
சென்னை அரும்பாக்கத்தில் நடந்த வங்கி கொள்ளையில் ஆய்வாளர் அமல்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
கருத்துகள்