சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் உயர்நீதிமன்றங்களில் 37 புதிய நீதிபதிகள் நியமனம்-சுதந்திர தினம் 2022
உயர்நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு நேற்றிரவு உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு 26 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றங்களுக்கு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதையும் சேர்த்து, இதுவரை நாட்டில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் மொத்தம் 138 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2016 - ஆம் ஆண்டு உயர்நீதிமன்றங்களில் 126 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டது அதிகளவாக இருந்த நிலையில், தற்போது, அந்த எண்ணிக்கையை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு உயர்நீதிமன்றங்களில் 126 நீதிபதிகளும், உச்சநீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் நீதித்துறை நியமன நடைமுறைகள், விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்