சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் இரு சமூக தரப்பினர் ஆயுதங்களால் தாக்கியதில் நான்கு பேர் காயம் 46 பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் இரு சமூக தரப்பினர் ஆயுதங்களால் தாக்கியதில் நான்கு பேர் காயமுற்றனர் சம்பவத்தில் ஈடுபட்டதாக 46 பேர் மீது மதகுபட்டி காவல்துறை வழக்கு பதிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி மேற்கு தெரு (அம்பேத்கர் தெரு) ராமசந்திரன் மகன் ரகுராமன் (வயது 28), செல்வம் மகன் மகிபாலன் (வயது 19). இவர்கள் இருவரும் கீழப்பூங்குடி மேலத்தெருவில் உள்ள ஒரு பிரிவினருக்கு சொந்தமான ஆதினமிளகி அய்யனார் கோவி ல் மந்தையில் அதாவது ஊர் பொது திண்ணையில் காலணி அணிந்த நிலையில் அமர்ந்திருந்ததாகவும் கோவில் முளைப்பாரி வைக்கும் திண்ணையில் இது போன்று உட்காரக்கூடாதென மற்றொரு தரப்பினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆயுதங்களுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியின், வடக்கு ஒன்றியத் தலைவர் லோகு (வயது 45), பிரபு (வயது 33(, ஆதிமுனியாண்டி (வயது 22), பாலா (வயது 32), ரஞ்சித் (வயது 19), ஆதி (வயது 20), முனியாண்டி (வயது 60), ரமேஷ் (வயது 50), செந்தில் (வயது 25), அர்ச்சுனன் (வயது 25) உள்ளிட்ட 38 பேர் ஆயுதங்களுடன் தாக்கியதாகவும். அதில் ரகுராமன், மகிபாலன் இருவரும் காயமுற்ற தாகவும் விசாரித்த நிலையில் தெரிகிறது. அங்கு காவல்துறை குவிக்கப்பட்டனர்.சிவகங்கை சமஸ்தானத்தின் மன்னர்களுக்கு பட்டம் கட்டும் சோழபுரம் அறம் வளர்த்த நாயகி அம்மன் அருள் மொழி நாதர் கோவில் ஆறூர் வட்டகை எனும் நாட்டின் நாட்டுக் கோவில்.
வடக்கு வட்டவகை தலைகிராமம் நாலுகோட்டை, தெற்கு வட்டவகை தலைகிராமம் ஒக்கூர்
மேலப்பூங்குடி கண்மாயில் சோழர் காலத்து வீரக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலப்பூங்குடி அருகில் வெள்ளமலையில் சோழர் காலத்து சிதைந்த சிவன்சிலையும் பீடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இப்படி பல ஆதாரங்கள் உள்ளன. சோழர் வழி வந்த தன்னாட்சி நாடுகள் வகுத்து கரை அமைத்து அம்பலம் தலைமையில் ஆலயம் அமைத்து நிர்வகித்து வந்திருக்கிறார்கள்.
ஆறூர் வட்டகை நாடு 22 1/2 கிராம நாட்டு அம்பலகாரர்கள், கிராம அம்பலகாரர்கள் மற்றும் அனைத்து கிராம பெரியோர்கள் ஒன்றுகூடி, நாலுக்கோட்டை நத்தமுடைய ஐய்யனார் கோவிலில் ஆன்மீக விழா தொடர்பாக நாட்டுக்கூட்டம் போடுவார்கள்.
ஆறூர் வட்டகை நாடு 22 1/2கிராமம் கொணட ஆதினமிளகி அய்யனார் கோவிலும் அதில் ஒன்று. நாலுகோட்டை,ஒக்கூர், இடையமேலூர்,பிரவலூர்,ஈசணூர், ஒ.புதூர்,சாலூர், காஞ்சிரங்கால், மேலமங்களம், மேலப்பூங்குடி, கீழப்பூங்குடி, கருங்காப்பட்டி,சிலுவினிப்பட்டி,குளக்கட்டப்பட்டி,கூவாணிப்பட்டி, முத்துப்பட்டி, புதுப்பட்டி, வேம்பத்தூர், பச்சேரி, தச்சம்பத்து, ஆவனியாபுரம், ஆவாரம்பட்டி,பேரனிப்பட்டி, ஆகிய ஊர்களில் கீழப்பூங்குடி முக்கிய கிராமம்
கருத்துகள்