வருவாய் ஆய்வாளருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை, புதுக்கோட்டை மாவட்டம குளத்தூர் தாலுகா கிள்ளுக்கோட்டை
விவசாயி ஒருவரிடம் ரூபாய் .500 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டை உள்வட்டப்பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). அதே பகுதியைச் சேர்ந்த கோபால். என்பவர் விவசாயி இவர், தனக்கு தந்தையின் வாரிசு சான்றிதழுக்கான தனது மனுவை பரிந்துரை செய்ய வேண்டுமென வருவாய் ஆய்வாளர்
பாலசுப்பிரமணியனை 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அணுகிய போது பரிந்துரை செய்து வழங்க ரூபாய்.500 லஞ்சம் கேட்ட நிலையில் அதை அரசு தரப்பில் சாட்சி முன்னிலையில் வாங்கிய போது அதை பெற்ற வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியனை புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் வாங்கிய கையுடன், பிடித்துக் கைது செய்ததையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்டத் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டதில்
பாலசுப்பிரமணியனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய்.14 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கருத்துகள்