கனல் கண்ணன் என்ற வி. கண்ணன் (வயது 60) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்,
திரைப்படச் சண்டைப் பயிற்சி மாஸ்டரான இவர் இந்து முன்னணியின் கலை இலக்கியப் பிரிவு மாநிலச் செயலாளர், நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாடு காவல்துறை மீதும் பெரியார் சிலையில் எழுதியுள்ள வாசகங்கள் மீதும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார், ,இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளைக் கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அதனாலயே அந்த சிலையை இடிக்க வேண்டுமென பேசியதாகவும், தான் பேசியது இந்திய சட்டத்திற்கு புறம்பானது ஏதுமில்லை என்றும், சிலையிலிருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வரும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஶ்ரீரங்கம் கோவில் முன் சிலை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காத காவல்துறை தன் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும். சிவ பெருமானை அவதூறாக பேசி ஹிந்துக்களின் நம்பிக்கைகளை புண்படுத்திய 'யூ டூ புரூட்டஸ்' மீது நடவடிக்கை எடுக்கவில்லை யென்று தெரிவித்துள்ளதாகவும், துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
ஜாமின் மனு நாளையோ அல்லது நாளை மறுதினமோ விசாரணைக்கு வரவுள்ளது , கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் இப்போது பெரியார் சிலையை கோவில் வாசலில் நிறுவியது உட்பட, அதில் இடம் பெற்று இருக்கும் வாசகங்கள் வரை நீதிமன்றத்தில் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதால் இது சட்டம் தன் கடமையை செய்ய உள்ள நிலையில் தற்போது இது விவாதமாகி இருக்கிறது.
கருத்துகள்