தபால் நிலையங்களில்
மூவர்ணக் கொடி விற்பனை
சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, மூவர்ணக் கொடிகளை வீட்டிற்கு கொண்டு வர மக்களை ஊக்குவிக்க இந்திய அரசு "இல்லந்தோறும் மூவர்ணம்" பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொடிகளை விற்பனை செய்வதற்கு அதன் பரந்த அமைப்பைப் பயன்படுத்தும் பணி அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை நகர மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில் 01.08.2022 முதல் கொடி விற்பனை தொடங்கியுள்ளது. அஞ்சல் அலுவலகங்கள் மூலம் விற்கப்படும் ஒரு கொடியின் விலை ரூ.25/-. கொடியின் பரிமாணம் 30" x 20" ஆகும். இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து 2191 தபால் நிலையங்களிலும் இக்கொடி விற்பனைக்கு உள்ளது. இம்மண்டலத்தில் 20 தலைமை தபால் நிலையங்கள்,545 துணை தபால் நிலையங்கள் மற்றும் 1626 கிளை தபால் நிலையங்கள் உள்ளன.
கொடிகளை சில்லரையாகவும் அல்லது மொத்தமாகவும் வாங்க, பொதுமக்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் www.epostoffice.gov.in என்ற வலைதளத்தில் மூலம் அவர்கள் கொடிகளை ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் க. நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்