முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு முழு இராணுவ மரியாதையுடன் நல்லா

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு அவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா தும்மக்குண்டு T.புதுப்பட்டியில் இன்று இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது 

 வியாழனன்று  ஜம்மு காஷ்மீர் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதலையடுத்து ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டிருந்த நிலையில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட பயங்கர மோதல்  காரணமாக ராணுவ வீரர் லட்சுமணன் உள்ளிட்ட நான்கு வீரர்கள் வீரமரணமடைந்தனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியபின் இன்று சனிக்கிழமை காலை தனி விமானம் மூலம் அவரது உடல் ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.





அங்கு அவரது உடலுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய்கான காசோலை மாவட்ட நிர்வாகம் சார்பில் லட்சுமணனின் பெற்றோரிடம் வழங்கப்பட்டதையடுத்து லட்சுமணனின் உடல் அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர், முன்னாள் முதல்வர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இந்திய ராணுவத்தின் சார்பில் 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் லட்சுமணனின் உடல் அவரது சொந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.







வீரர் லட்சுமணன்  உடல் மீது போர்த்தப்பட்ட தேசிய கொடி மனைவியிடம் வழங்கப்பட்டது.  அந்த நிகழ்வில் தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியாக ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையை வீரர் லட்சுமணன் குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்  மேலும்   இறுதி அஞ்சலி நிகழ்வில் 

அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் .இ.மகேந்திரன்



ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடல் விமானம் மூலம்  மதுரை கொண்டு வரப்பட்டது அப்போது அவர்களது உடலுக்கு மதுரை விமான நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணியை வீசியதால் மதுரை விமான நிலையம் அருகே  பரபரப்பு ஏற்பட்டது.   

வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் இன்று மதுரை விமான நிலையம் அருகே குவிந்த போது, இந்நிகழ்வு விமான நிலைய இடத்திற்கு வந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "அரசு நிகழ்ச்சி என்பதால் இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர் எனக் கேள்வி எழுப்பியதாகவும் அதனால், அமைச்சருக்கும் பாஜகவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்ற நிதி அமைச்சரின் காரின் மீது பாஜகவின் நபர்கள் காலணிகளை விட்டு எறிந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காலணி எறிந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்னர் அமைச்சரின் வாகனம் அங்கிருந்து சென்றது. தொடர்ந்து, அமைச்சரின் கார் மீது காலணி வீசியவர்கள் குறித்து காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அமைச்சர் வாகனம் மீது தாக்குதல் நடத்திய மதுரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் மார்க்கெட் குமார், பாலா, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா, கோபிநாத் மற்றொரு கோபிநாத் என ஐந்து நபர்கள் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில்.  இந்த விவகாரம் தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...