முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடிமக்கள் தங்களின் சமூக ஊடக காட்சிப்படத்தை மூவண்ணக்கொடியாக மாற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்

குடிமக்கள் தங்களின் சமூக ஊடக காட்சிப்படத்தை மூவண்ணக்கொடியாக மாற்றுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி என்ற  கூட்டான இயக்கத்தின் ஒரு பகுதியாக  குடிமக்கள் தங்களின் சமூக ஊடக காட்சிப்படத்தை மூவண்ணக்கொடியாக மாற்றுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

 ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஆகஸ்ட் 2-ம் நாளான இன்று சிறப்புமிக்கது! சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவை நாம் கொண்டாடும் தருணத்தில் நமது மூவண்ணக்கொடியைக் கூட்டு இயக்கமாக கொண்டாடுவதற்கு வீடுகள் தோறும் மூவண்ணக்கொடி என்பதற்கு நமது நாடு தயாராகியுள்ளது. எனது சமூக ஊடக பக்கங்களின் காட்சிப்படத்தை நான் மாற்றியிருக்கிறேன். இதையே நீங்கள் அனைவரும் செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். இச் சூழலில் 


  வீடுகளில் தேசியக் கொடி திட்டம்

சுமார் 20 கோடி வீடுகளில் கொடி ஏற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயம்.

இந்தியாவில்  தற்போது 4 கோடி கொடிகள் மட்டுமே உள்ளன என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. மீதமுள்ள கொடிகளின் ஆர்டரை மாநில அரசோ, இந்திய அரசோ அவர்களின் மட்டத்தில் தயாரித்து விற்பனை செய்யுமிடத்திற்கு அனுப்ப வேண்டும். மாநில அரசு விரும்பினால், மாநிலத்தின் தேவைக்கேற்ப மத்திய அரசிடம் மொத்தக் கொடிகளை கோரலாம் அல்லது தானே கொடிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

மத்திய அரசின் கூற்றுப்படி, கொடிகள் மூன்று அளவுகளில் கிடைக்கும். மூன்றின் விலையும் மாறுபடும். ரூபாய்.9, ரூபாய்.18, ரூபாய்.25 க்கு கிடைக்கும்..

கொடி தயாரிக்கும் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இந்தக் கொடிகளை மத்திய மாநில அரசுகளுக்கு கடனாக வழங்கும்.

குடிமக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கொடியை வாங்க வேண்டும்.

மக்கள் விரும்பினால், மொத்தமாகக் கொடிகளை வாங்கி மற்றவர்களுக்குப் பரிசளிக்கலாம். கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் இதைச் செய்யலாம்.

உள்ளாட்சிகள், கடைக்காரர்கள், பள்ளிகள், கல்லூரிகள் இதில் இணைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அஞ்சல் நிலையங்களிலும் கொடிகள் கிடைக்கும்.

இந்திய அரசின் இலக்கு 20 கோடி வீடுகளில் கொடி ஏற்றுவது. கொடியின் குறைந்தபட்ச விலை 10 ரூபாயாக இருந்தாலும், மொத்தமாக 200 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் செலவிடப்படும்.

கொடிகளை வாங்கும் மக்களிடமிருந்து இந்த 200 கோடி ரூபாய் வரும்.

இந்தியாவில் இவ்வளவு அதிகமான கொடிகளை ஒரே நிறுவனத்தால் தயாரிக்கமுடியாது.

இதற்காக சிறு, குறு தொழில்களுடன் தொடர்புடைய பல சுயஉதவிக் குழுக்கள், வணிகர்கள், வணிக நிறுவனங்களுக்கு டெண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த முழு இயக்கத்தையும் முழுமையாக உதாரணத்துடன் புரிந்துகொள்வது அவசியம் 

ராஜஸ்தான் அரசு ஒரு கோடி வீடுகளில் கொடிகளைப் பறக்க விட இலக்கு நிர்ணயித்துள்ளதில் 70 லட்சம் கொடிகளை மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும், மாநில அரசு 30 லட்சத்தை ஏற்பாடு செய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், தனது ஏழு மண்டலங்களுக்கான 70 லட்சம் கொடிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

ஆனால், மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சில பிரச்சனைகள் உருவாகின்றன.

அது 10 ரூபாயில் கொடி, கம்பு, எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவு எல்லாம் அடங்கும். இந்தப் பணம் மிகவும் குறைவென்று சில நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் காரணமாக இந்திய அரசு மாநிலங்களுக்கு கொடியை மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் சில இடங்களுக்கு மட்டுமே அளிக்கிறது, எல்லா மாவட்டங்களுக்கும் அல்ல.

இரண்டாவது பிரச்சனை பணம் செலுத்துவது. சில மாநில அரசுகள் கொடி விற்பனை செய்த பிறகு கொடி தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றிப் பேசின. இந்தச் சூழ்நிலையில், எல்லாக் கொடிகளும் விற்றுப் போகாவிட்டால், பணம் என்னவாகும் என்பது நிறுவனங்களின் அச்சமாக உள்ளது.

கொடி சட்டத்தில் மாற்றம்  டி.எம்.சி  தலைவரும் ஆர்.டி.ஐ ஆர்வலருமான சாகேத் கோகலே இந்த முழு திட்டத்தையும் ஓர் ஊழலாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றன் பின் ஒன்றாக நான்கு ட்வீட்கள் பதிவுசெய்தவர், இந்த இயக்கம், நரேந்திர மோதி அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களுடனான தொடர்பின் விளைவு என்று குறிப்பிட்டார். மேலும் இந்த இயக்கத்திற்காக இந்திய கொடி சட்டத்திலும் அரசு மாற்றங்களைச் செய்துள்ளதென்று கூறினார்.

இந்தியக் கொடிச் சட்டம் 2002 ஆம் ஆண்டின் படி, தேசியக் கொடியை கையால் நெய்த அல்லது கையால் நெய்யப்பட்ட துணிப் பொருட்களிலிருந்து மட்டுமே உருவாக்க முடியும். ஆகவே குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கொடிகளை உருவாக்குவது எளிதல்ல. 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தக் கொடி சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றத்திற்குப் பிறகு இப்போது தேசியக் கொடியை, கையால் ராட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட, கையால் நெசவு செய்யப்பட்ட அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட பட்டு, பருத்தி, பாலியஸ்டர் துணிகள் மூலம் தயாரிக்கலாம்.

இந்தியாவில் பாலியஸ்டர் துணிகளை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  என்று சாகேத் கோகலே கூறுகிறார்.


இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள வெவ்வேறு ஜவுளி ஆலை உரிமையாளர்களுக்கு கொடிகள் தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் ரிலையன்ஸ் நேரடியாக ஈடுபடவில்லை என்று பத்திரிகை வழி தகவல் தெரிவிக்கிறது..


கொடியை பெரிய அளவில் தயாரிக்க சம்மதித்துள்ள நிறுவனங்கள், பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க மற்ற வியாபாரிகளிடம் துணை ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் சுதந்திரத்தின் ஆடை என்று நேரு வர்ணித்த காதி மூலம் தேசியக் கொடியை உருவாக்கியவர்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் அழிக்கிறார்கள்" என்று விவரிக்கிறார்.

ஹூப்ளியிலுள்ள காதிக் கொடி தயாரிக்கும் பிரிவு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 90 லட்சம் கொடிகளுக்கான ஆர்டர்களைப் பெற்றது என்றும் கொடி சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் 2022 ஆம் ஆண்டு 14 லட்சம் கொடிகளுக்கான ஆர்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும் ஒரு ஆங்கில நாளிதழ்  வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கிறது.

காதியை ஊக்குவிக்க குறைந்தபட்சம் ஒரு காதி கைக்குட்டையையாவது வைத்திருக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோதி அறிவுறுத்திவரும் நிலையில் காதி கொடிகளின் இந்த நிலைமை இந்தியாவில் காணப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...