புதிய இரண்டாவது விமான நிலையம் ரூபாய் நாற்பதாயிரம் கோடியில்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் பகுதிகளில் நிலங்களை ஆய்வு செய்த இந்திய விமான . இந்த இரண்டு இடங்களில் ஒரிடத்தில் விமான நிலையம் அமைக்க ஏதுவாகும் எனக் கருதினர்.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அறிக்கையை டெல்லியிலுள்ள மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கியது. மேலும் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணி தமிழக தொழில் துறையிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் புதிய விமான நிலையம் அமையப் போகும் இடம் இன்று இறுதி செய்யப்படுமெனத் தெரிகிறது.
ஶ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் இரண்டாவது சென்னை பன்னாட்டு விமான நிலையம் அமைவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங் தகவல்.
ஜூலை மாதம் 16 ஆம் தேதி அமைச்சர் சிந்தியா தலைமையில் உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் முடிவில் அமைச்சர் கூறுகையில் 2024 ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.
இது பிரதமரின் கனவு. இதை நான் நனவாக்க வேண்டுமென்றார். புதிய விமான நிலைய திட்டத்திற்கு 51 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. இந்த விமான நிலையத்தில் 8 சர்வதேச முனையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த விமான நிலையம் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமெனத் தெரிகிறது. இனி நிலம் கையகப்படுத்தும் பணி துவங்குமென எதிர்பார்ப்பு நிலவுகிறது1990 ஆம் ஆண்டு மற்றும் 2000 ஆண்டுகளில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் நிலங்களின் விலை ஏற்றத்திற்கும் மக்கள் தங்களது நிலங்களை இழந்து விடுவோமே என்ற அச்சத்திற்கும் வித்திட்ட முந்தைய காங்கிரஸ் திமுக அரசு. பல அரசியல் கட்சி மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கை விடப்பட்ட திட்டம்.
இதோ பா ஜ க அரசு வலிந்து விவசாய நிலங்களில் அதுவும் சென்னையிலிருந்து 68 கி.மீ. தொலைவில் புதிய இரண்டாம் விமான நிலையம் உருவாக்குகிறது.
வளர்ச்சி வளர்ச்சி என்று ஏரிகள் மாவட்டம் என்றிருந்த சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் விவசாய நிலங்களை அழித்தொழித்து விட்டார்கள்.
பரவலான வளர்ச்சி இல்லாத எந்த நாடும் முன்னேறாது. மாற்றமும் காணாது.
கருத்துகள்