இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
ஐக்கிய நாடுகளின்நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவும் மந்தன் தளம் அறிமுகம்
ஐக்கிய நாடுகள் வகுத்த நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு இணங்க இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுவதற்காக தொழில்துறை, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலியலுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்காக மந்தன் தளத்தை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சியுடன் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினர் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பை வழங்குவதற்காக விடுதலையின் 75-ஆவது ஆண்டு அமிர்த பெருவிழாவை முன்னிட்டு இந்தத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சமூக தாக்கத்தின் புதுமை மற்றும் தீர்வுகளின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த மந்தன் தளத்தால் இயலும்.
பங்குதாரர்கள் இடையேயான கலந்துரையாடல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக வசதி போன்றவற்றிற்கு இந்தத் தளம் வழிவகை செய்வதோடு, சமூக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இடையீடுகள் உட்பட ஏராளமான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் இடையீடுகளில் ஏற்படும் சவால்களையும் இந்தத் தளம் பகிர்ந்து கொள்ளும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொழில்துறையினரின் பங்களிப்பை கட்டமைத்து, வளர்ப்பதற்கான நமது முயற்சிகளை அதிகரிக்க உறுதியளிக்கும் தளமான மந்தனின் அறிமுகம், ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நமது அர்ப்பணிப்பின் சான்றாகவும் அமைந்துள்ளது என்று இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தெரிவித்தார்.
கருத்துகள்