தஞ்சாவூர் மாவட்டத்தில் பூண்டி புஷ்பம் கலைக் கல்லூரி 1956-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த துளசி அய்யா வாண்டையார் இக் கல்லூரியினை நிர்வகிக்கிறார். அப்பகுதியில் அடித்தள ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் கல்லூரியை உருவாக்கிச் செயல்படுத்தினார். இக் கல்லூரியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றிருக்கின்றனர்.
இக்கல்லூரி ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைக்கப் பெற்று. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் “அ” அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் நிறுவனர் துளசி அய்யா வாண்டையார் இங்கு திறந்தவெளி அரங்கமுள்ளது. வீரையா வாண்டையார் நினைவு அறக்கட்டளை நிர்வாகப் பணிகளை நடத்துகிறது.
அரசு அறிவித்த கட்டணத்தை மட்டுமே பெற்று கூடுதலாககீ கட்டணங்களை வசூலிக்காத நிலையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய கல்வி நிறுவனம் அதனால் துளசி அய்யா வாண்டையாரை கல்வி வள்ளல் என்றே பகுதி மக்கள் அழைத்தனர். அவர் காலமான பின்னர் அவர் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார். அமமுக டி.டி.வி.தினகரனின் சமீபத்திய சம்பந்தியாவார் பூண்டி புஷ்பம் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பேராசிரியர் பணிக்கு நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினருக்குக் வந்த தகவலில் விசாரணை நடத்தினர். 2017-ஆம் ஆண்டு உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இனச் சுழற்சி முறையைப் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. உதவிப் பேராசிரியர்கள் தியாகராஜன், கற்பகசுந்தரி ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, தங்கள் பகுதியில் வருவாய் வட்டாட்சியர் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப் போலியான சாதிச் சான்றிதழ் பெற்று அதை கல்லூரியில் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதைத் தொடர்ந்து, கல்லூரியில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில். இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரப்பில் தெரியவரும் தகவல்``கல்லூரிப் பணி நியமனத்தில் நிர்வாகத்தின் தரப்பில் முறைகேடு நடந்திருப்பதாக துளசி அய்யா வாண்டையார் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் எங்களிடம் புகார் அளித்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களும் கிடைத்த நிலையில், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
மறைந்த துளசி அய்யா வாண்டையார் கல்லூரி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது தங்களை வேதனையுடையச் செய்திருப்பதாகக் அந்தக் கல்லூரியில் படித்து பல துறைகளில் உள்ள முன்னாள் மாணவர்கள். நாட்டில் இதுபோல் பல இடங்களில் முறைகேடுகள் நடந்து அதை கண்டும் காணாமல் உள்ள நிலை நாம் பல உதாரணங்கள் கூறமுடியும் ஆனால் இந்த ஒரு கல்லூரி மட்டும் இது போன்ற நிலை இல்லை. பல உயர் ஜாதி மாணவர்கள் உட்பிரிவுகள் பெயரில் சான்றிதழ் பெற்று அரசுப் பணிகளில் உள்ள நிலையில் அவர்கள் அனைவரது கல்விக்காண சான்றிதழ்கள் சரிபார்ப்பு தற்போது அவசியம் இட ஒதுக்கீடுகள் உண்டு என்பதால் சில வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல ஊழல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மூலம் இப்படி சான்றுகள் பெற்று பணியில் பலர் உள்ளனர் அதை விசாரித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது.
கருத்துகள்