தமிழ்நாட்டில் காவல்துறை பணியிலிருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் காவலர்களை உடனே திரும்பப் பெற வேண்டுமென
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆர்டலி சம்பந்தப்பட்ட புகார் வந்தால், அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்ததன் படி இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆர்டலி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 19 ஆர்டலிகள் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்டர்லி முறை குறித்து டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்தாக தெரிவித்தார்:-
"ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறைத் தலைவரிடமிருந்தோ வருவதில்லை. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையைப் பின்பற்றுவது வெட்கக்கேடானதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காவல்துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி காவல்துறையில் ஆர்டர்லி முறை அறிமுகப்படுத்தப்பட்டு. சீருடைகளைப் பராமரிப்பது, தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, காவல்துறை உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர். காவல்துறை அதிகாரி 24-7 பணியிலிருக்கும் போது குறுகிய நேரத்தில் குற்றமோ, கலவரமோ விரைந்து செல்ல வேண்டிய நிலையில். அதில், ஆர்டர்லி பயிற்சி பெற்ற சீருடை அணிந்தவர் அந்த அதிகாரிக்கு துணையாகவும் உதவியாகவும் இருக்க வேண்டியிருந்தது.
ஆனால், அதுவே காலப்போக்கில் சுதந்திரம் பெற்ற பிறகு சமைப்பதற்கும், துவைப்பதற்கும், அதிகாரிகளின் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும், அதிகாரியின் குடும்பத்திற்கு காய் கனிகள் வாங்கி வருவதற்கும், ஆர்டர்லிகளை தவறாகப் பயன்படுத்தப்படத் தொடங்கினர்.
இதனால் ஆர்டர்லி காவலர் கீழ்த்தரமாக நடத்தப்படும் ஒருவராகவே மாறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுதம் ஏந்திய காவல்துறை கான்ஸ்டபிளுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஏழாம் வகுப்பு மட்டுமே இருந்தது. இப்போது, ஒவ்வொரு கான்ஸ்டபிளும் பட்டதாரிகளாகவே சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் காவல்துறையில் சேர்கின்றனர் .தமிழக காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி முதல் காவலர் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், அயல் பணி என்ற அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக வேலை செய்து வருவதாக தகவல்.
அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தாரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் பணிகளைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால், ஆவணத்திலோ தமிழகத்தில், 1979 ஆம் ஆண்டே ஆர்டர்லி காவலர் முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ஆர்டர்லி முறை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டபோது, அப்போது டிஜிபியான டி.கே.ராஜேந்திரன், இதைத் தான் பதில் மனுவாகத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையில் பணியாற்றும் U.மாணிக்கவேல் என்பவரை வேறு பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர்கள் வசிக்கும் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும் படி 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014 ஆம் ஆண்டிலேயே இடத்தைக் காலி செய்யுமாறு காவல்துறை உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தைக் காலி செய்திருப்பதாகவும், ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
உயர் அதிகாரிகளின் கீழுள்ளவர்களைக் கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடுமெனத் தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் நீதிபதி சுப்ரமணியம் விசாரித்து வருகிறார். அந்த வழக்குத்தான் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதற்கு, காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா? நாம் ஒன்றும் இராஜா இராணி கிடையாது, நாட்டின் அனைத்து குடிமக்களும் இராஜா, இராணிக்கள் தான்.. நாம் அனைவரும் மக்களின் சேவகர்கள் தான். முதன்மைச் செயலாளர் முறையாகச் செயல்பட வேண்டும். வெறும் எச்சரிக்கை மட்டுமே போதாது. நடவடிக்கையும் அவசியம் எடுக்க வேண்டும். மக்களுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் காவல்துறைக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. எனத் தெரிவித்துள்ளார். வழக்கு ஒத்திவைப்பு
கருத்துகள்