மதுரைக் கந்துவட்டி நபரிடம் சிக்கி போலிக் கணக்கு தரத் தயங்கிய நிறுவனங்கள் வருமான வரி சோதனைக்கு உள்ளாகிய நிலை
திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நிதியாளர்களின் வீடுகள் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
துவக்க காலத்தில் சிறிய வட்டித் தொழில் மதுரையில் நடத்திய அன்புச் செழியன் பின்னர் மதுரை இராமநாதபுரம் திரைப்பட வினியோகம் செய்த நபர்களுக்கு நிதியளித்து பணம் குவித்த வரலாறு அறிவோம். பின்னர் பணம் சேர்த்து தன் சிறகுகளை விரித்து சென்னை திரைப்படங்களை தயாரிக்க உதவியாக நிதியாளரானார். வட்டி அசல் பைசல் செய்யாத பலர் தங்கள் தியேட்டர் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சொத்துக்களை இழந்த கதைகள் பல உண்டு அதில் பல பிரபலமான நபர்களின் சொத்தும் உண்டு இந்நிலையில் அவர் மீது வரி ஏய்ப்புப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து வருமான வரி துறையினர் அவரது வீட்டிற்கு நேற்று காலை சென்று சோதனை நடத்தனர். 2020 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த பிகில் பட வருவாய் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில்
நேற்று காலை 5 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்
விஜய் 68 திரைப்படத்தை இயக்கும் சிபிச்சக்ரவர்த்தி முதல் நடிகர் சிம்புவின் ஃபிரீ அட்வைஸ் வரையிலான
திரைப்படங்களின் நிதியாளர் தான் அன்புச்செழியன். அதேபோல்
தியாகராயநகரில் உள்ள சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகத்திலம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். 2017 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலைக்கு மதுரை அன்புச் செழியன் தான் காரணமென்ற குற்றச்சாட்டும் எழுந்தது.தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத முகமாக இருந்து வரும் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிகாலை சோதனை மற்றும் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் எனப் பல இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. குறித்து பிரபல சினிமா பத்திரிகை ஒன்று தெரிவிக்கையில், 'மதுரை அன்புச் செழியன் வீட்டுக்கு வருமான வரித்துறை முன்பு சோதனை மேற்கொண்டபோது, எந்தெந்த தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற கணக்கு புத்தகம் சிக்கியது. ஆனால், அந்த தயாரிப்பாளர்களிடம் அன்புச்செழியனிடம் பணம் வாங்கியதற்கான எந்தக் கணக்கும் இல்லை. எனவே வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இது குறித்து விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்பியது. மதுரை அன்புச் செழியன் அந்தத் தயாரிப்பாளர்களிடம் தான் சொல்வதை போல் பதிலளிக்குமாறு அறிவுறுத்தினாராம். அவர்கள் பதிலே கொடுக்காமல் இருந்ததால் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கலாம் என்றும். நமக்கு கிடைத்த தகவலின்படி 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக இருக்கிறார்கள். இதில் நடிகர் தனுஷும் அடக்கம்.' என்றார் முக்கியமான திரையுலக பத்திரிகையாளர் தற்போது நடக்கும் சோதனை தொடர்கதையாக மாறும். ஆக கந்துவட்டி நபரிடம் சிக்கி போலிக் கணக்கு தரத் தயங்கி தங்கள் நிறுவனமும் சோதனைக்கு உள்ளாகியதால் மற்றவர்கள் நிலை பரிதாபமாகிறது.
கருத்துகள்