தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய இராணுவ வீரர்களுக்கு இரங்கல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர். இலட்சுமணன் அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த மதுரை வீரர் லட்சுமணன் குடும்பத்தாருக்கு முதல்வர் ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவு ஆளுநர் ரவி இரங்கல். இன்று மதியம் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று இராணுவ வீரர்கள் வீர மரணமடைந்ததில் . மதுரை புதுப்பட்டி கிராமத்தின் இராணுவ வீரர், லட்சுமணன் அதில் ஒருவர். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது வீர மரணம் அடைந்த மூன்று வீரர்களுக்கும் எனது அஞ்சலியையும், வீர வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன்,
வீர மரணம் அடைந்த வீரர் தாய் நாட்டைக் காக்கும் பணியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த இரங்கல் செய்தியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த மூன்று ராணுவ வீரர்களுகளின் குடும்பத்திற்கு இரங்கல் அவர், உயிரிழந்த வீரர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிறாத்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை ரஜெளரி பகுதியிலுள்ள ராணுவ முகாமிற்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் மூன்று இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததில் ஒருவர் மதுரை புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற வீரரும் தாக்குதலில் உயிரிழந்தார். மேலும்
இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் சுபேதர் ராஜேந்திர பிரசாத், மனோஜ் குமார், மற்றும் தமிழ்நாடு வீரர் லட்சுமணன் வீர மரணம் அடைந்துள்ளனர் என்று காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இது தொடர்பாக, இராணுவ வீரர்கள் தேடுதல் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடத் தயாரான நிலையில், ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள்