தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை தலைமை இயக்குனராக சத்யேந்திர பிரகாஷ் பொறுப்பேற்றார்
பத்திரிகை தகவல் அலுவலக (பிஐபி) முதன்மை தலைமை இயக்குனராக திரு சத்யேந்திர பிரகாஷ் இன்று பொறுப்பேற்றார். திரு பிரகாஷ், 1988-ம் ஆண்டு தொகுப்பின் இந்திய தகவல் சேவை அதிகாரி ஆவார். இதற்கு முன் மத்திய மக்கள் தொடர்பக தலைமையகத்தில் முதன்மை தலைமை இயக்குனராக பதவி வகித்தார்.
மத்திய அரசின் மக்கள் தொடர்பு, ஊடக நிர்வாகம், நிர்வாகம், கொள்கை உருவாக்கம், திட்ட அமலாக்கம் போன்ற பல்வேறு துறைகளில் திரு சத்யேந்திர பிரகாஷ் விரிவான அனுபவம் பெற்றிருப்பவர். யுனெஸ்கோ, யுனிசெப், யுஎன்டிபி போன்ற பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளில் மத்திய அரசின் பிரதிநிதியாக இவர் இருந்துள்ளார். மத்திய மக்கள் தொடர்பு தலைமையகத்தில் அரசு விளம்பர உள்ளடக்க முறைப்படுத்தல், இணையதளம் மற்றும் டிஜிட்டல் ஊடக கொள்கை, பண்பலை வானொலி கொள்கை, டிஜிட்டல் திரைப்பட கொள்கை போன்றவற்றுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதில் இவர் முக்கிய பங்குவகித்துள்ளார். உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு குறித்து 2021 குடியரசு தினத்தன்று தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் முதல்முறையாக இடம் பெற்ற அலங்கார ஊர்தி பங்களிப்புக்காக இவர் அங்கீகாரம் பெற்றிருந்தார்.
மத்திய அரசின் மக்கள் தொடர்பு பிரச்சாரங்கள் பலவற்றோடும் மக்கள் தொடர்பு பணிகளை வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துவதோடும் திரு பிரகாஷ் இணைந்திருந்தார். முக்கியமான தகவல், கல்வி, தகவல் தொடர்பு பிரச்சாரங்கள் பற்றிய யோசனைக்கு இவர் பாராட்டு பெற்றவர். 2021-22-ல் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் கல்வி மூலம் வாக்காளர்கள் பங்கேற்பை அதிகப்படுத்தியதற்காக அண்மையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு தேசிய விருது பெற்றவர்.
திரு சத்யேந்திர பிரகாஷ் பொறுப்பேற்ற போது, பத்திரிகை தகவல் அலுவலக மூத்த அலுவலர்களால் அவர் வரவேற்கப்பட்டார்.
கருத்துகள்