விமானங்களுக்கு நிகராக சென்னையிலிருந்து புறப்படும் தனியார் ஆம்னிப் பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு
தமிழகத்தின் தொடர் விடுமுறை காரணமாக
சென்னையிலிருந்து புறப்படும் தனியார் ஆம்னிப் பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு
சுதந்திர தினத்தை தொடர்ந்து விடுமுறை காரணமாக, சென்னையில் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து புகார்கள் வரும் போதெல்லாம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்படும். ஆனால், இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு இன்று முதல் இரவு பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்ல ரூபாய். 2,300 வரையும், சென்னையில் இருந்து கோயமுத்தூர் செல்ல ரூபாய்.3000 வரையும், மதுரை, திருநெல்வேலிக்குச் செல்ல ரூபாய். 3,500 வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்துக்கும் வந்ததா எனத் தெரியவில்லை
ஆனால் இது விமானங்களில் பயணம் செய்யும் போது உள்ள கட்டணங்களை மிஞ்சும் நிலையில் உள்ளது. இது ஊழல் மளிந்த நிலையில் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டிய நிலையில் தான் போக்குவரத்துத் துறை உள்ளது.வட்டார போக்குவரத்துத் துறையும் இந்த மூன்று நாள்களும் விடுமுறை. என்பது அமைச்சரே தாங்கள் அறிவீர்கள் தானே ?
மக்கள் ஏன் புகார் அளிக்க வேண்டும்?உளவுத்துறை எதற்கு இருக்கிறது.வட்டாரப் போக்குவரத்து பறக்கும்படை எதற்குள்ளது?போக்குவரத்து துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் வேலை என்ன?
கருத்துகள்